மாணவர்களே அலர்ட்..! 1 - 12 ஆம் வகுப்பு வரை காலாண்டு தேர்வு விடுமுறை அறிவிப்பு.. முழு தகவல்

By Thanalakshmi VFirst Published Aug 22, 2022, 11:23 AM IST
Highlights

தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு அட்டவணை மற்றும் விடுமுறை குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

நிகழ் கல்வியாண்டு முதல் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளி மாணவர்களுக்கு  நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு, ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்றன. மேலும் அரையாண்டு, காலாண்டு தேர்வுகளும் இணையவழி மூலமே நடைபெற்றன. 

மேலும் படிக்க:சென்னையில் கலாச்சாராம், ஆன்மிகம் அனைத்து மக்களையும் ஈர்த்துள்ளது..! தமிழக ஆளுநர் சென்னை தின வாழ்த்து

இந்நிலையில் கொரோனா மூன்றாம் அலை பாதிப்பு குறைந்ததையடுத்து, மழையர் பள்ளிகள் முதல் அனைத்தும் திறக்கப்பட்டன. அதுமட்டுமின்றி, 2021- 22 ஆம் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வுகளும் நடத்தப்பட்டன. கடந்த மே மாதம் 10 மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2  மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் நடந்தது. ஜூன் 20 ஆம் தேதி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. 

மேலும் படிக்க:தமிழக கோவில்களில் அர்ச்சகர்கள் நியமனம் செல்லுமா? செல்லாதா? உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!

இதனையடுத்து கோடைவிடுமுறைகளுக்கு கடந்த ஜூன் 13 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. 12 ஆம் வகுப்பிற்கு ஜூன் 20 ஆம் தேதியும் 11 ஆம் வகுப்புக்கு ஜூன் 27 ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்பட்டன. மேலும் பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிப்பு  வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு தேர்வு தேதிகள் குறித்தும் அறிவிப்பை வெளியிட்டார். முன்னதாக் தேர்வு தேதி தெரிவிக்கப்படும் போது, அதற்கேற்றாற் போல் பாடங்கள் நடத்தப்படு, மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த வழிவகை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. 

மேலும் படிக்க:5 ஆண்டுகளுக்கு பிறகு ஜெயா டிவிக்கு சிறப்பு பேட்டியளித்த ஓபிஎஸ்..! என்ன சொல்லிருக்காருனு தெரியுமா..?

இந்நிலையில் தற்போது காலாண்டு தேர்வுக்கான அட்டவணை மற்றும் விடுமுறை குறித்து அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை இயக்கம் வெளியிட்டுள்ளது. அதன்படி 1 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்., 26 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை காலாண்டு தேர்வு நடைபெறும். பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு செப்., 23 முதல் 30 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை பொறுத்தவரை, அக்டோபர் 1 முதல் அக்டோபர் 5 ஆம் தேதி வரை காந்தி ஜெயந்தி, சரஸ்வதி பூஜை உள்ளிட்டவற்றுக்காக விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும் அக்டோபர் 6 ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

click me!