பட்டாசு ஆலையில் டிராக்டர் மோதி பயங்கர விபத்து... வெடி சத்தத்தால் அதிர்ந்தது விருதுநகர்..!

By Asianet TamilFirst Published Jan 30, 2020, 4:09 PM IST
Highlights

2020ம் ஆண்டின் தீபாவளிக்கான பட்டாசு உற்பத்தி விருதுநகர் மாவடடத்தில் உள்ள 800க்கும் மேற்பட்ட ஆலைகளில் விறுவிறுப்பாக தொடங்கி உள்ள நிலையில் இந்த ஆண்டின் முதல் விபத்து இன்று ஏற்பட்டது. விருதுநகர் மாவட்டம் வச்சகாரப்பட்டி அருகே வி. முத்துராமலிங்காபுரத்தில் இயங்கி வரும் காளிராஜ் என்பவர்க்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இந்த விபத்து ஏற்பட்டது. பொதுவாக பட்டாசு தொழிலாளர்களின் அஜாக்கிரதையினாலும், வெப்பநிலை மாற்றத்தினாலும் பட்டாசு விபத்துகள் ஏற்படுவது வழக்கம். ஆனால் முற்றிலும் மாற்றமாக, பட்டாசு ஆலையில் வளர்ந்துள்ள புற்களை சுத்தம் செய்ய வந்த டிராக்டரினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. 

விருதுநகர் அருகே 2020ம் ஆண்டின் முதல் பட்டாசு விபத்து. ஐந்து அறைகள் தரைமட்டம். தப்பியோடி எமனை ஏமாற்றிய தொழிலாளர்கள்.

2020ம் ஆண்டின் தீபாவளிக்கான பட்டாசு உற்பத்தி விருதுநகர் மாவடடத்தில் உள்ள 800க்கும் மேற்பட்ட ஆலைகளில் விறுவிறுப்பாக தொடங்கி உள்ள நிலையில் இந்த ஆண்டின் முதல் விபத்து இன்று ஏற்பட்டது. விருதுநகர் மாவட்டம் வச்சகாரப்பட்டி அருகே வி. முத்துராமலிங்காபுரத்தில் இயங்கி வரும் காளிராஜ் என்பவர்க்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இந்த விபத்து ஏற்பட்டது. பொதுவாக பட்டாசு தொழிலாளர்களின் அஜாக்கிரதையினாலும், வெப்பநிலை மாற்றத்தினாலும் பட்டாசு விபத்துகள் ஏற்படுவது வழக்கம். ஆனால் முற்றிலும் மாற்றமாக, பட்டாசு ஆலையில் வளர்ந்துள்ள புற்களை சுத்தம் செய்ய வந்த டிராக்டரினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. 

நாக்புரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் அனுமதி பெற்று இயங்கும் இந்த ஆலையில் 40க்கும் மேற்பட்ட அறைகளில் பேன்சி ரகப் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இன்று காலை வழக்கம் போல் பட்டாசு தயாரிக்கும் பணியில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். 

ஆலைக்குள் நுழைந்த டிராக்டர் இயக்கப்பட்ட போது வளைவில் இருந்த ஒரு பட்டாசு அறையில் மோதியதில் பட்டாசுகளில் உராய்வு ஏற்பட்டு இந்த விபத்து ஏற்பட்டது. அறையினுள் இருந்த தொழிலாளர்கள் தப்பியோடினர். சற்று நேரத்தில் அடுத்தடுத்த 5 அறைகளில் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறி அறைகள் தரைமட்டமாயின. அதிர்ஷ்டவசமாக தொழிலாளரகள் அனைவரும் உயிர் தப்பினர்.

தகவலறிந்து வந்த சிவகாசி மற்றும் விருதுநகர் தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்துக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். சம்பவ இடத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் உதயகுமார் மற்றும் வச்சகாரப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

click me!