பிரசாரத்தின் போது புரோட்டா சுட்டு ஒரே இலையில் சாப்பிட்ட ராஜேந்திர பாலாஜி, விஜய பிரபாகரன்

By Velmurugan s  |  First Published Apr 4, 2024, 10:15 PM IST

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனுக்கு புரோட்டா சுட்டு வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் கே.டி. இராஜேந்திர பாலாஜி.


தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் அவர்களுடைய பிரசாரங்களை தீவிரப்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில்  தேமுதிக வேட்பாளராக மறைந்த விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் போட்டியிடுகிறார்.

Tap to resize

Latest Videos

undefined

இந்த நிலையில் இன்று சிவகாசி  நகர் பகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி தலைமையில் முரசு சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இந்த நிலையில் வாக்கு சேகரிப்பின் போது சிவகாசி பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் கே.டி. இராஜேந்திர பாலாஜி மற்றும் விஜய பிரபாகரன் இருவரும் புரோட்டா சுட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

மோடி மீண்டும் வெற்றி பெற்றால் நாட்டில் நடைபெறும் கடைசி தேர்தல் இதுவாக தான் இருக்கும் - கனிமொழி எச்சரிக்கை

மேலும் தாங்கள் சுட்ட புரோட்டாவை ஒரே இலையில் இருவரும் அமர்ந்து புரோட்டா சாப்பிட்டனர். ஏற்கனவே விருதுநகர் புரோட்டா தனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று என்ன விஜய பிரபாகரன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

click me!