இந்து சமுதாய விரோதி திருமாவளவனை கைது செய்து ஜெயிலில் போடுங்க... எரிமலையாய் வெடித்த ஜீயர்..!

Published : Oct 27, 2020, 12:50 PM IST
இந்து சமுதாய விரோதி திருமாவளவனை கைது செய்து ஜெயிலில் போடுங்க... எரிமலையாய் வெடித்த ஜீயர்..!

சுருக்கம்

பெண்கள் குறித்து தரக்குறைவாக பேசிய திருமாவளவனை கைது செய்து, தண்டனை தராவிட்டால், மிகப் பெரிய போராட்டம் நடைபெறும் என ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜர் ஜீயர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பெண்கள் குறித்து தரக்குறைவாக பேசிய திருமாவளவனை கைது செய்து, தண்டனை தராவிட்டால், மிகப் பெரிய போராட்டம் நடைபெறும் என ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜர் ஜீயர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பேட்டியளிக்கையில்;- பெண்கள், தாய்மார்கள் குறித்து தரக்குறைவான வார்த்தையை திருமாவளவன் பேசியிருக்கிறார். இப்போது, இது மாதிரி பேசக்கூடிய தேச விரோதிகள் அதிகமாகி விட்டனர். பெண்களைப் பற்றி இழிவாக மனு சாஸ்திரத்தில் கூறியிருப்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். அந்த மாதிரி எவ்வித கருத்தும் மனு சாஸ்திரத்தில் இல்லை. 

வரும் தேர்தலில் இதுபோன்ற இந்து சமுதாய விரோதிகளுக்கு ஓட்டு போடக்கூடாது.  இந்து பெண்களை இழிவாக பேசிய திருமாவளவனை கைது செய்து, தண்டனை தரா விட்டால், அனைத்து தாய்மார்கள், சமுதாய தலைவர்கள், இந்து மத தலைவர்கள், துறவியர் அனைவரும் சேர்ந்து, மிகப் பெரிய போராட்டத்தை நடத்த வேண்டி இருக்கும். என ஜீயர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

கிளிமஞ்சாரோ சிகரத்தில் தமிழக சிறுவர்களின் இமாலய சாதனை! ரூ.1,00,000-ஐ அள்ளிக்க கொடுத்த நயினார் பாலாஜி! என்ன காரணம்?
இந்த சோகத்துக்கு ஒரு முடிவே இல்லையா? வெடி விபத்தில் தூள் தூளாக சிதறிய பட்டாசு ஆலை! 4 பேர் பலி!