விழுப்புரம் மாவட்டம் 144 தடை உத்தரவை மீறி வெளியே வாகனங்கள் தேவை இல்லாமல் சுற்றித் திரிபவர்களுக்கு போலீசார் நூதன தண்டனை அளித்து வருகின்றனர. இந்நிலையில், இன்று அவசியமில்லாமல் சுற்றித்திரிந்த 4 பேருக்கு விழுப்புரம் நகர போலீசார் அந்த இடத்திலேயே தோப்புக்கரணம் போடச் சொல்லி கண்டித்துள்ளனர்.
ஊரடங்கை மீறி தேவையில்லாமல் சாலையில் வாகனத்தில் சுற்றிய 4 இளைஞர்களை பிடித்து போலீசார் தோப்புக்கரணம் போடவைத்தனர்.
உலகம் முழுவதும் 190 நாடுகளுக்கும் மேல் பரவி கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. நேற்று நள்ளிரவு 12 மணி முதல் ஏப்ரல் 15-ம் தேதி வரை நாடு முழுவதும் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து மற்ற அனைத்து சேவைகளும் முடக்கப்பட்டுள்ளன.
மேலும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சமூக இடைவெளி உள்ளிட்ட வழிமுறை பின்பற்ற வேண்டுமென தமிழக அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அரசு கொரோனா பீதி தொடர்பாக விழிப்புணர்வு நடவடிக்கை எடுத்து வந்தாலும், மக்களுக்கு ஒன்றும் பெரிதாக அடுத்து கொள்ளாமல் இருந்து வருகின்றனர். இதனால் கடைகளுக்கு கூட்டம் கூட்டமாக செல்வது, வீதிகளில் உலா வருதல் நடைப்பயிற்சி செய்தல் போன்றவற்றில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் 144 தடை உத்தரவை மீறி வெளியே வாகனங்கள் தேவை இல்லாமல் சுற்றித் திரிபவர்களுக்கு போலீசார் நூதன தண்டனை அளித்து வருகின்றனர. இந்நிலையில், இன்று அவசியமில்லாமல் சுற்றித்திரிந்த 4 பேருக்கு விழுப்புரம் நகர போலீசார் அந்த இடத்திலேயே தோப்புக்கரணம் போடச் சொல்லி கண்டித்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.