விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் அடுத்த அன்னம்புத்தூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் குமார் (34). தனியார் பேக்கரி ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவருக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்னர் சுமித்ரா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.
திருமணமாகி 15 நாட்களே ஆனநிலையில் புதுமாப்பிள்ளை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் அடுத்த அன்னம்புத்தூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் குமார் (34). தனியார் பேக்கரி ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவருக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்னர் சுமித்ரா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.
இதையும் படிங்க;- Crime News: 15 ஆண்டில் 300 பேருக்கு விஷ ஊசி போட்டு கருணை கொலை? பகீர் வீடியோ வைரல்..!
இந்நிலையில், வழக்கம் போல காலையில் பேக்கரி கடையில் வேலைக்கு சென்றுவிட்டு மாலை வீடு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, கிளியனூர் கேணிப்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது திடீரென எதிர்பாராத விடிதமாக மாடு குறுக்கே வந்ததால் நிலைதடுமாறி சென்டர் மீடியனில் மோதியதில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையும் படிங்க;- Crime News : 14 வயது சிறுமியை சீரழித்த காமக்கொடூரன்.. நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு என்ன தெரியுமா?
இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த கிளியனூர் போலீசார் உயிரிழந்த ரமேஷ் குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் கணவர் உயிரிழந்த செய்தியை அறிந்த மனைவி நெஞ்சில் அடித்துக்கொண்டு கதறி அழுதார். திருமணமாகி 15 நாட்களே ஆனநிலையில் புதுமாப்பிள்ளை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.