பாமக.வுக்கு அளிக்கும் வாக்கு சாதி, மதவாதத்திற்கு அளிக்கும் வாக்கு; பீட்டர் அல்போன்ஸ் எச்சரிக்கை

By Velmurugan s  |  First Published Jul 2, 2024, 2:24 PM IST

பாமக வுக்கு அளிக்கும் வாக்கு பாஜக.விற்கு அளிக்கும் வாக்கு, சாதிக்கும், மதவாதத்திற்கு அளிக்கும் வாக்காகும் என விக்கிரவாண்டியில் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.


சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் விக்கிரவாண்டியில் உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அன்னியூர் சிவா போட்டியிடுவதால் அவரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். 

ராகுல் காந்தியின் பேச்சால் இந்துகளின் மனம் புண்பட்டுள்ளது; தமிழிசை சௌந்தரராஜன் காட்டம்

Tap to resize

Latest Videos

undefined

இடைத்தேர்தலில் ஏன் இவ்வளவு முக்கியதுவம் கொடுக்கிறோம் என்றால், பாசிச அரசியல், மதவாதத்தை, சாதிய வாதத்தை, முன்னெடுத்த பாஜகவை மக்கள் விரும்பவில்லை என்பதால் தான் 40க்கு 40 இந்தியா கூட்டணி தமிழகத்தில் வெற்றி பெற்றுள்ளது. சாதிய அரசியலையும், மதவாத அரசியலையும் மக்கள் நிராகரிப்பார்கள். அந்த வகையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடுகிற சாதியவாதிய பாமகவை மக்கள் நிராகரிப்பார்கள். மேலும் பாஜகவின் முகமூடியாக வால்பிடிக்கின்ற பாமகவையும் மக்கள் நிராகரிப்பார்கள்.

நீங்கள் தொடங்கிய நீட் எதிர்ப்பு இன்று எங்க கொண்டுவந்து நிருத்தீருக்கு பாத்தீங்களா? எல்.முருகன் கேள்வி

முன்னேற்றத்திற்கும், மத நல்லினக்கத்துக்கும் திமுகவிற்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். சிறுபான்மையினருக்கான பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி உள்ளனர். போதை பொருள், கள்ள சாராயம் தமிழகத்தில் மட்டும் உள்ள பிரச்சினை அல்ல, இந்தியா முழுவதும் எல்லா இடங்களில் உள்ளது. இதனை கட்டுபடுத்துவது சவலாக உள்ளது. போதை பொருட்கள் குஜராத்தில் இருந்து தான் பல்வேறு பகுதிகளுக்கு வருகிறது. இதனை தடுக்கக்கூடிய அதிகாரம் ஒன்றிய அரசுக்கு தான் உள்ளது. மேலும் கூட்டத்தில் உயர் கல்வித் துறை அமைச்சர் மற்றும் சிறுபான்மை நலன் துறை அமைச்சர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினர்.

click me!