வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டை சட்டப்பூர்வமாக பெற்றுத்தரவேண்டும் என்பதே அரசின் நோக்கம் - அமைச்சர் விளக்கம்

By Velmurugan s  |  First Published Jul 1, 2024, 5:12 PM IST

இடைத்தேர்தல் என்றாலே மாவட்ட செயலாளர்கள் அமைச்சர்கள் தொகுதியில் பிரச்சாரம் செய்வதற்கு உரிமை உண்டு. அதன் அடிப்படையில் நாங்கள் தேர்தல் பணியாற்றி வருகிறோம் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.


விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து சேலம் கோவிந்தராஜ்  தலைமை கழக பேச்சாளர் அகத்தியர் ஆன்மா என்ற தலைப்பில் அகத்தியர் வேஷம் இட்டு பனையபுரம் காலனி பகுதிகளில் வீதியில் நடந்து சென்று  பிரசாரம் மேற்கொண்டார். இவருடன் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்து பிரசாரத்தில் ஈடுபட்டனர். 

இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, எங்களைப் பொறுத்தவரை 10.5% இட ஒதுக்கீடை சட்ட உரிமையோடு பெற்று தர வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் நோக்கம் எங்கும் தடைபட்டு விடக்கூடாது என்ற அடிப்படையில் சட்ட உரிமையோடு இட ஒதுக்கீட்டை பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். 

Tap to resize

Latest Videos

undefined

அரசியலில் படித்தவர்களை விட அர்ப்பணிப்பு உள்ளவர்கள் தான் தேவை; நடிகர் விஜயின் கருத்துக்கு வானதி பதில்

மத்திய அரசு 2021ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை எடுத்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் எடுக்கவில்லை. இடைத்தேர்தல் என்றாலே மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள், தொகுதியில் பிரசாரம் செய்வதற்கு உரிமை உண்டு. அதன் அடிப்படையில் நாங்கள் தேர்தல் பணியாற்றி வருகிறோம். எந்த தேர்தலை எடுத்துக் கொண்டாலும் ஆளுங்கட்சி அமைச்சர்கள் தேர்தல் பணியாற்றுவார்கள். அதனை புறக்கணிக்க மாட்டார்கள். 

எல்லை மீறும் நீட் எதிர்ப்பு? கோவையில் தேசத்திற்கு எதிராக எழுதப்பட்ட வார்த்தைகளால் பரபரப்பு

பாட்டாளி மக்கள் கட்சியினர் வடமாநிலத்தில் இருந்து பலரையும் கொண்டு வந்து இந்த தொகுதியில் குவித்து வைத்துள்ளனர். அதை நாங்கள் யாரும் குற்றம் என்று சொல்லவில்லை. எங்களுக்கு தமிழ்நாடு முழுவதும் ஆள் இருக்கிறார்கள், அதனால் வருகிறார்கள். நாங்கள் குவிந்துள்ளோம் என கூறுவது தோல்விக்கான காரணத்தை இப்போதே தேடியிருக்கிரார்கள் என தெரிவித்துள்ளார்.

click me!