Watch : உளுந்தூர்பேட்டை அருகே மின்மாற்றியிலிருந்து ஆயில் திருட்டு! மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

By Dinesh TG  |  First Published Jun 6, 2023, 4:38 PM IST

உளுந்தூர்பேட்டை அருகே மின்மாற்றியில் இருந்து மர்ம நபர்களால் ஆயில் திருடும் சம்வபம் தொடர்கதையாகி வருகிறது. இதனால், விவசாய நிலங்களுக்கு செல்லக்கூடிய மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் 300 ஏக்கருக்கு மேல் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மணலூர் வைப்பாளையம் உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள மின்மாற்றிகளில் இருந்து நள்ளிரவில் மர்ம நபர்கள் மின்மாற்றியை உடைத்து அதிலிருந்து ஆயிலை திருடிச் சென்றுள்ளனர். இதனால் விவசாய நிலங்களுக்கு செல்லக்கூடிய மின்சாரம் தடைபட்டதால் சுமார் 500 ஏக்கருக்கு மேல் விவசாய பயிர்களுக்கு தண்ணீர் பாச்ச முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

பின்னர் இதைப் பற்றி தகவல் அறிந்த மின்சாரதுறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து திருநாவலூர் காவல் நிலையத்தில் இது சம்பந்தமாக புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மின்மாற்றில் இருந்து ஆயில் திருட்டு கும்பலை வலை வீசி தேடி வருகின்றனர்.

Tap to resize

Latest Videos

undefined

மேலும் இந்தப் பகுதிகளில் தொடர்ந்து மின்மாற்றில் இருந்து ஆயில் திருடப்பட்டு வருவதால் அச்சமயத்தில் விவசாய நிலங்களுக்கு செல்லக்கூடிய மின்சார தடையினால் குறித்த நேரத்தில் விவசாய பயிர்களில் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் பயிர்கள் காய்வதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

click me!