லாரி - புதிய டாடா ஏசி நேருக்கு நேர் மோதல்... 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு..!

Published : Oct 13, 2019, 05:27 PM IST
லாரி - புதிய டாடா ஏசி நேருக்கு நேர் மோதல்... 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு..!

சுருக்கம்

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே லா.கூடலூரைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் புதிதாக வாங்கிய சரக்கு ஆட்டோவுக்கு பூஜை போடுவதற்காக ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது கடம்பூர் என்ற இடத்தில், வளைவான சாலையில் சென்ற போது வலது புறமாக ஏறிய சரக்கு ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த எரிவாயு ஏற்றி வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதியது. 

விழுப்புரம் அருகே டாடா ஏசி - லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே லா.கூடலூரைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் புதிதாக வாங்கிய சரக்கு ஆட்டோவுக்கு பூஜை போடுவதற்காக ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது கடம்பூர் என்ற இடத்தில், வளைவான சாலையில் சென்ற போது வலது புறமாக ஏறிய சரக்கு ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த எரிவாயு ஏற்றி வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதியது. 

இதில் சரக்கு ஆட்டோ அப்பளம் போல் உருக்குலைந்தது. படுகாயமடைந்த 10-க்கும் மேற்பட்டவர்களை அங்கிருந்த மக்கள் மீட்டு முதலுதவி சிகிச்சையளித்து 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்த 3 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

ஐயோ! இதுக்கா உன்ன டாக்டருக்கு படிக்க வச்சேன்! எங்களை விட்டு போயிட்டியே! அமிர்த வர்ஷினி முடிவுக்கு இதுதான் காரணமா?
100 கி.மீ வேகம்! குறுக்கே வந்த வாகனம்! சுக்கு நூறாக நொறுங்கிய KTM பைக்! இளைஞர்களுக்கு நேர்ந்த சோகம்!