செஞ்சி அருகே பட்டாசு ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம் வெடித்துச் சிதறியது. இதில், 2 பேர் தலைதுண்டித்து உடல் சிதறி உயிரிழந்தனர். 9 பேர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
செஞ்சி அருகே பட்டாசு ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம் வெடித்துச் சிதறியது. இதில், 2 பேர் தலைதுண்டித்து உடல் சிதறி உயிரிழந்தனர். 9 பேர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தீபாவளிக்காக பட்டாசுகளை ஏற்றிக்கொண்டு பாண்டிச்சேரியில் இருந்து வேன் ஒன்று திருவண்ணாமலை நோக்கி சென்றுக்கொண்டிருந்தது. திண்டிவனம் - செஞ்சி சாலை அருகே வடவானூர் அருகே வேன் வந்தபோது, அதில் இருந்து புகை கிளம்பியது. உடனடியாக வேனை நிறுத்திவிட்டு டிரைவரும் கிளீனரும் ஏன் புகை வருகிறது என்று பார்த்தனர். அப்போது திடீரென்று பட்டாசுகள் வெடிக்கத் தொடங்கின.
பட்டாசுகள் வெடித்ததில் சரக்கு வாகனம் சுக்கு நூறாக நொறுங்கியது. பட்டாசு வெடிப்பின் தாக்கத்தால், அரை கிலோ மீட்டர் தூரம் வரை இருந்த கடைகள், வீடுகளில் கதவு ஜன்னல்களில் இருந்த கண்ணாடிகள் நொறுங்கின. அரசுப் பேருந்து ஒன்றின் கண்ணாடி உடைந்தது. தேநீர் கடை ஒன்று முற்றிலும் நாசமானது. இந்த விபத்தில் 2 சம்பவ தலை துண்டித்தும் உடல் உறுப்பு பாகங்கள் ஆங்காங்கே சிதறியும் உயிரிழந்தனர். மேலும், 9 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து தீ விபத்து தொடர்பாக சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து பட்டாசுகளை அணைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.