திருமணமான 6 மாதங்களில் கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை... கணவரிடம் போலீசார் விசாரணை..!

Published : Sep 27, 2019, 02:38 PM ISTUpdated : Sep 27, 2019, 02:39 PM IST
திருமணமான 6 மாதங்களில் கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை... கணவரிடம் போலீசார் விசாரணை..!

சுருக்கம்

கள்ளக்குறிச்சி அருகே திருமணமாகி 6 மாதங்களே ஆன நிலையில் கர்ப்பிணி பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

கள்ளக்குறிச்சி மாவட்டம் தண்டலை கிராமத்தை சேர்ந்த சடையன் என்பவருடைய மகள் ஐஸ்வர்யாவிற்கும், அதே பகுதியைச் சேர்ந்த பாரதி என்னும் கட்டிட தொழிலாளிக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஐஸ்வர்யா 4 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் கணவர் பாரதியுடன் அருகிலுள்ள அகரக்கோட்டாலம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பரிசோதனைக்கு சென்றுள்ளார். பரிசோதனை முடித்து வரும் போது பாரதி ஐஸ்வர்யாவை தனது வீட்டிற்கு அழைத்துச் செல்லாமல் அவரது தாய் வீட்டருகே விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, பெற்றோர் இல்லாத சமயத்தில் ஐஸ்வர்யா தனது கணவருக்கு போன் செய்து தற்கொலை செய்யப்போவதாக கூறியுள்ளார். இதனை பெரிதும் பொருட்படுத்தாமல் கணவர் பாரதி நீண்ட நேரம் கழித்து ஐஸ்வர்யாவின் தாய் வீட்டிற்கு சென்ற போது அங்கு மனைவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். 

உடனே இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஐஸ்வர்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும், தற்கொலை தொடர்பாக போலீசார் கணவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

ஐயோ! இதுக்கா உன்ன டாக்டருக்கு படிக்க வச்சேன்! எங்களை விட்டு போயிட்டியே! அமிர்த வர்ஷினி முடிவுக்கு இதுதான் காரணமா?
100 கி.மீ வேகம்! குறுக்கே வந்த வாகனம்! சுக்கு நூறாக நொறுங்கிய KTM பைக்! இளைஞர்களுக்கு நேர்ந்த சோகம்!