கட்டாயப்படுத்தி திருமணம்! என்னுடைய சாவுக்கு இவங்கதான் காரணம்! கடிதம் எழுதிவிட்டு இளைஞர் தற்கொலை.!

Published : Apr 04, 2024, 02:08 PM ISTUpdated : Apr 04, 2024, 02:12 PM IST
கட்டாயப்படுத்தி திருமணம்! என்னுடைய சாவுக்கு இவங்கதான் காரணம்! கடிதம் எழுதிவிட்டு இளைஞர் தற்கொலை.!

சுருக்கம்

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் பாவாடை மகன் ராதாகிருஷ்ணன் (27). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். 

கட்டாயப் படுத்தி திருமணம் செய்து வைத்ததாக 5 நபர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு கடிதம் எழுதி வைத்து இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் பாவாடை மகன் ராதாகிருஷ்ணன் (27). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் காதலித்து வந்த நிலையில் ஆனால் அப்பெண்ணை திருமணம் செய்ய மறுத்து வந்துள்ளார். இதனால், பெண்ணின் உறவினர்கள் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

இதையும் படிங்க: சென்னையில் அதிர்ச்சி சம்பவம்.. ரயில் மோதியதில் 4 பேர் உடல் சிதறி பலி.. நடந்தது என்ன?

இந்த புகாரை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து  ராதாகிருஷ்ணனை அழைத்து விசாரணை நடத்தினர். பின்னர், காவல் நிலைய வாசலில் உள்ள கோவிலில் கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில், இன்று அதிகாலை மனம் உடைந்து ராதாகிருஷ்ணன் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

இதையும் படிங்க:  செல்போனில் ஆபாச வீடியோ காட்டி அதுபோல செய்யலாமா பள்ளி மாணவியிடம் கேட்ட தலைமை ஆசிரியர்! இறுதியில் நடந்தது என்ன?

அவர் தற்கொலை செய்தவதற்கு முன்னதாக தனக்கு கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்ததாகக் கூறி பெண்ணின் உறவினர்கள் 5 பேரின் பெயர்களை குறிப்பிட்டு கடிதம் எழுதியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ராதாகிருஷ்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

ஐயோ! இதுக்கா உன்ன டாக்டருக்கு படிக்க வச்சேன்! எங்களை விட்டு போயிட்டியே! அமிர்த வர்ஷினி முடிவுக்கு இதுதான் காரணமா?
100 கி.மீ வேகம்! குறுக்கே வந்த வாகனம்! சுக்கு நூறாக நொறுங்கிய KTM பைக்! இளைஞர்களுக்கு நேர்ந்த சோகம்!