கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 9 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 9 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் அழையா விருந்தாளியாக வந்த கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடிவருகிறது. நாளுக்கு நாள் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. அரசு தரப்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வந்தாலும் எதுவும் பயனளிக்கவில்லை. இந்நிலையில், நேற்று மட்டும் 1,927 பேர் கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 36,841ஆக உயர்ந்துள்ளது.
இதில், சென்னையில் மட்டும் 1,392 பேர் நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 25,937ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 340ஐ தாண்யுள்ளது.
இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்னர் அரசு மருத்துவமனையில் கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து, அவரது சளி மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில், பரிசோதனை முடிவுகள் வருவதற்கு முன்னரே நிறைமாத கர்ப்பிணி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இன்றும் மட்டும் தமிழகத்தில் 14க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.