தமிழகத்தில் 34-வது மாவட்டம் உதயமானது... முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் எடப்பாடி..!

By vinoth kumar  |  First Published Nov 26, 2019, 1:30 PM IST

தமிழகத்தின் 34-வது மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்து திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.


தமிழகத்தின் 34-வது மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்து திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து கள்ளக்குறிச்சி மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. புதிய கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர் ஆகிய 2 வருவாய் கோட்டங்களும் கள்ளக்குறிச்சி, சின்னசேலம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம் மற்றும் புதிய தாலுகாவான கல்வராயன் மலை ஆகிய 6 தாலுகாக்கள் இடம் பெற்றுள்ளது. அதேபோல், மூன்று காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகங்கள், 3 மாவட்ட கல்வி அலுவலகங்கள், 5 சட்டப்பேரவை தொகுதிகள் மற்றும் ஒரு மக்களவை தொகுதியுடன் இன்று புதிய மாவட்டமாக உதயமாகி உள்ளது. இந்த மாவட்டத்திற்கு மாவட்ட ஆட்சியராக கிரண்குராலா நியமிக்கப்பட்டுள்ளார். அதுபோல் போலீஸ் சூப்பிரண்டாக ஜெயச்சந்திரன் நியமனம் செய்யப்பட்டார். 

Latest Videos

இந்நிலையில், புதிய மாவட்டமாக உருவாகியுள்ள கள்ளக்குறிச்சியின் தொடக்க விழா இன்று காலை 11 மணிக்கு கோலாகலமாக நடைபெற்றது. இதில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தலைமை தாங்கினார். தலைமை செயலாளர் சண்முகம் வரவேற்று பேசினார். 

பின்னர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதிய கள்ளக்குறிச்சி மாவட்டத்தை தொடங்கி வைத்தார். புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்து அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். பொங்கல் பரிசாக ரேஷன் அட்டை உள்ள குடும்பத்தினருக்கு ரூ.1000 வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த நிழ்ச்சியில் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், வேலுமணி, அன்பழகன், உதயகுமார் மற்றும் எம்.எல்.ஏ. குமரகுரு, பிரபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

click me!