ஊரடங்கிற்கு நடுவே திருப்பத்தூரில் ஆலங்கட்டி மழை... மகிழ்ச்சியில் ஆட்டம் போட்ட மக்கள்..!

By vinoth kumarFirst Published Apr 7, 2020, 4:05 PM IST
Highlights

கோடைகாலம் தொடங்கி உள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் நாளுக்கு நாள் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அதன்பிறகு, வெப்பநிலை குறைந்து வருகிறது. சேலம், வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு மாட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

ஊரடங்கள் மக்கள் பெரும் சொல்ல முடியா துயரத்தில் இருந்து வரும் நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தின், பல இடங்களில் திடீரென ஆலங்கட்டி மழை பெய்ததால் மக்கள் உற்சாகமடைந்தனர்.

கோடைகாலம் தொடங்கி உள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் நாளுக்கு நாள் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அதன்பிறகு, வெப்பநிலை குறைந்து வருகிறது. சேலம், வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு மாட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. மேலும், காற்றின் ஈரப்பதம் குறைந்து, அதிகரித்த புழுக்கம், மாலை வரை நீடித்து வருகிறது. 

இந்நிலையில், திருப்பத்தூா், ஆதியூா், கொரட்டி, செலந்தம்பள்ளி பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்தது. சுமாா் அரை மணிநேரம் பெய்த மழையால் அப்பகுதியில் குளிா்ந்த காற்று வீசியது. இதனால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்தனா். அதேபோல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்துள்ளது. 

இது தொடர்பாக வானிலை மையம் கூறுகையில் தமிழ்நாட்டில் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் நிலவுவதால் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர், மதுரை, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதேபோல், மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலையே காணப்படும் என கூறினார். 

click me!