இந்து அறநிலைத்துறை சார்பில் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில், தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களில் நாளையும், வரும் 4ம் தேதியும் சிறப்பு யாக பூஜைகளை நடத்துமாறு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களில் வருகிற 1 மற்றும் 4-ம் தேதிகளில் சிறப்பு யாகம் நடத்த வேண்டும் என இந்து அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.
undefined
சீனாவின் பிறப்பிடமான கொரோனா வைரஸ் உலக நாடுகளில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. அதேபோல், இந்தியாவிலும் வேகமாக பரவி வருவதால் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதனால், பள்ளி, கல்லூரிகள், நகை கடைகள், வணிக நிறுவனங்கள், கோவில்களும் அதிரடியாக மூடப்பட்டன. மேலும், கொரோனா பீதியால் இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்து அறநிலைத்துறை சார்பில் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில், தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களில் நாளையும், வரும் 4ம் தேதியும் சிறப்பு யாக பூஜைகளை நடத்துமாறு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, முக்கிய ஆலயங்களில் ஹோமம், பாராயணம், சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த யாகங்களில் பொதுமக்கள் பங்கேற்க கூடாது எனவும், அர்ச்சகர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.