திருப்பத்தூரில் படுஜோராக நடைபெற்ற வெளிமாநில சாராய பாக்கெட் விற்பனை; போலீஸ் அதிரடி வேட்டை

By Velmurugan s  |  First Published Nov 16, 2023, 1:44 PM IST

திருப்பத்தூரில் வீட்டில் பதுக்கிவைத்து விற்பனை செய்யப்பட்ட ரூ.1 லட்சம் மதிப்பிலான வெளிமாநில மதுபாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த மாடப்பள்ளி பகுதியைச் சேர்ந்த அசோகன் மகன் அண்ணாமலை இவர் தொடர்ந்து வெளி மாநில மது பாக்கெட்டுகளை கள்ளத்தனமாக விற்பனை செய்து வருவதாக திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட்ஜனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பெயரில் திருப்பத்தூர் கிராமிய போலீசார் மாடப்பள்ளி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அண்ணாமலை வீட்டில் காவல் துறையினர் சோதனை செய்தனர். சோதனையின் போது வீட்டின் அருகே மறைத்து வைத்திருந்த பத்து பாக்ஸ் அளவிலான வெளிமாநில மது பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மதுபாக்கெட்டுகளின் மொத்த மதிப்பு ஒரு லட்ச ரூபாய் எனவும் போலீசார் தெரிவித்தனர்.

Tap to resize

Latest Videos

undefined

வழக்கத்திற்கு மாறாக சீற்றத்துடன் காணப்படும் கடல் அலை; புதுவையில் கடலில் குளிக்க மக்களுக்கு தடை

மேலும் போலீசார் வருவதை அறிந்த அண்ணாமலை அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் கிராமிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

click me!