20 மாவட்டங்களில் பொய்த்துப்போன பருவ மழை..! அதிர்ச்சி ரிப்போர்ட்..!

By Manikandan S R S  |  First Published Dec 22, 2019, 3:28 PM IST

வடகிழக்கு பருவமழை இந்த வருடம் 20 மாவட்டங்களில் குறைவான அளவில் பெய்திருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக பரவலாக மழை பெய்து வந்தது. தென்மாவட்டங்கள் உட்பட மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. இதன்காரணமாக அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. நெல்லை மாவட்டம் தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. காவிரியில் நீர்வரத்து அதிகரித்து இந்த ஆண்டில் மட்டும் நான்கு முறை மேட்டூர் அணை நிரம்பியிருக்கிறது.

Tap to resize

Latest Videos

சென்னையிலும்பரவலாக மழை பெய்தது. இதனால் நிலத்தடி நீர்மட்டத்தின் அளவு உயர்ந்ததாக தகவல்கள் வந்தன. ஆனால் சென்னையின் தண்ணீர் தேவைக்கு ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம், புழல்,பூண்டி மற்றும் சோழவரம் ஏரிகள் பாதியளவு தான் நிரம்பியிருக்கின்றன. ஏரிகள் நிரம்பாததால் வரும் ஆண்டில் வரலாறு காணாத தண்ணீர் பஞ்சம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை சராசரி அளவான 44 சென்டி மீட்டர் பதிவாகியிருப்பதாக வானிலை மைய அதிகாரி பாலசந்திரன் கூறியிருக்கிறார். 17 மாவட்டங்களில் மழை பொலிவு இந்த வருடம் அதிகம் என்றும் நீலகிரில் 74 சதவீதமும் ராமநாதபுரத்தில் 60 சதவீதம் அதிகம் பெய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். பல மாவட்டங்களில் மழையின் அளவு குறைந்திருப்பதாகவும் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை, வேலூர், பெரம்பலூர் உட்பட 20 மாவட்டங்களில் மழையின் அளவு குறைந்துள்ளதாக அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். 

click me!