வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை மையம் கூறுகையில்;- வளிமண்டல மேலடுக்கில் மேற்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக வேலூர், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, நெல்லை, சேலம், தேனி, நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
undefined
அதேபோல், சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் அவ்வப்போது ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. பிப்ரவரி 23,24 ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலையே நிலவும். கடந்த 24 மணிநேரத்தில் கடலூர், புதுச்சேரியில் அதிகபட்சமாக 19 செ.மீ மழை பதிவாகியுள்ளது.