ஃபிரிட்ஜில் வைத்த பிரியாணி சாப்பிட்ட 5 வயது சிறுமி பரிதாப மரணம்...!

By vinoth kumar  |  First Published Apr 13, 2019, 11:42 AM IST

அரக்கோணத்தில் பழைய பிரியாணியை சாப்பிட்ட 5 வயது சிறுமி உடல்நிலை பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


அரக்கோணத்தில் பழைய பிரியாணியை சாப்பிட்ட 5 வயது சிறுமி உடல்நிலை பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வேலூர் மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த தண்டலம் புது காலனியில் சீனிவாசன், கனகா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கோபிகா என்ற மகளும் உள்ளனர். சீனிவாசன், கனகாவும் உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிக்குச் சென்றுள்ளனர். அப்போது விருந்தில் மீதம் இருந்ததால் கனகா அதை வீட்டிற்கு கொண்டு வந்து, குளிர்சாதனப்பெட்டியில் வைத்துள்ளார். 

Tap to resize

Latest Videos

இந்நிலையில் மறுநாள் காலை குளிர்சாதனப்பெட்டியில் இருந்த பிரியாணியை மீண்டும் சுட வைத்து வீட்டிலுள்ள குழந்தைகளுக்குக் கொடுத்துள்ளார். இதைச் சாப்பிடச் சீனிவாசனின் மகள் கோபிகா உள்ளிட்ட 4 சிறுவர்கள் சிறிது நேரத்தில் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்‌பட்டுள்‌ளது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் குழந்தைகளை உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

ஆனால் கோபிகா என்ற 5 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி மருத்துமனையில் உயிரிழந்தார்.மற்ற 3 குழந்தைகளுக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரியாணி சாப்பிட்டு சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

click me!