திருமணமாகி 5-வது நாளில் துயரம்... மனைவியின் உடலை மார்பில் சாய்த்துக்கொண்டு கதறிய கணவர்... மனதை பதறவைத்த காட்சிகள்..!

Published : Sep 07, 2019, 04:22 PM ISTUpdated : Sep 07, 2019, 04:25 PM IST
திருமணமாகி 5-வது நாளில் துயரம்... மனைவியின் உடலை மார்பில் சாய்த்துக்கொண்டு கதறிய கணவர்... மனதை பதறவைத்த காட்சிகள்..!

சுருக்கம்

திருமணமான 6 நாளில் புதுப்பெண் விபத்தில் சிக்கிய உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திருமணமான 6 நாளில் புதுப்பெண் விபத்தில் சிக்கிய உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பெருமாள் பேட்டை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் ( 28) எலக்ட்ரீசியன். இவருக்கும் புதூர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த திவ்யா (24) என்பவருக்கும் கடந்த 1-ம் தேதி திருமணம் நடைபெற்றது. 

இந்நிலையில், புதுமணத் தம்பதி இருசக்கர வாகனத்தில் ஏலகிரி மலைக்கு வந்தனர். அங்கு உள்ள பூங்கா படகு குழாம் ஆகியவற்றை சுற்றி பார்த்துவிட்டு மாலை 6 மணிக்கு மலைப்பாதையில் வந்துகொண்டிருந்தனர். 9-வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது எதிரே வந்த கார் மீது மோதாமல் இருக்க மணிகண்டன் திடீரென பிரேக் போட்டு பைக்கை நிறுத்த முயன்றார். அந்த நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்த பைக் மலைப்பாதை தடுப்புச் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. 

இதில் இருவரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். தலையில் பலத்த காயமடைந்த புதுப்பெண் திவ்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். புதுமாப்பிள்ளை மணிகண்டன் காயத்துடன் உயிர் தப்பினார். அவர் திவ்யா உடலை பார்த்து கதறி அழுத காட்சி காண்போரை கண்கலங்க வைத்தது. இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் திவ்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணமான 6 நாளில் புதுப்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

பாலாற்றில் வெள்ள எச்சரிக்கை..! கரையோர கிராம மக்களே உஷார்... நிரம்பியது பேத்தமங்களா ஏரி!
ஷாக்கிங் நியூஸ்! வேலூரில் பட்டப்பகலில் மிளகாய் பொடி தூவி சிறுவன் கடத்தல்! போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி!