மீண்டும் பெண் போலீஸ் தற்கொலை... காவல்துறையில் தொடரும் சோகம்...!

Published : Mar 17, 2019, 04:38 PM IST
மீண்டும் பெண் போலீஸ் தற்கொலை... காவல்துறையில் தொடரும் சோகம்...!

சுருக்கம்

திருச்சியில் ஆயுதப்படை பெண் காவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காவலர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

திருச்சியில் ஆயுதப்படை பெண் காவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காவலர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. 

திருச்சி மாவட்டம் கிராப்பட்டி பகுதியில் உள்ள மாவட்ட ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வந்தவர் ராஜலட்சுமி (25). இவர் காவலர் குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். முதலாம் எண் பட்டாலியனில் காவலராகப் பணியாற்றி வந்த சிவக்குமாரும் ராஜலட்சுமியும் காதலித்து வந்துள்ளனர். நெருக்கமான பழக்கத்தில் கர்ப்பிணியான ராஜலட்சுமி, சிவக்குமாரை திருமணம் செய்துகொள்ள வலியுறுத்தியுள்ளார். ஆனால் சிவக்குமாரின் வீட்டார் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்டு வந்தார். 

இந்நிலையில், இன்று காலை ராஜலட்சுமி பணிக்கு வராததால் அவர் வீட்டுக்கு சென்று பார்த்த போது கதவு உட்புறமாக பூட்டியிருந்தது. இதனையடுத்து சந்தேகமடைந்த தோழிகள் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது தூக்கில் தொங்கிய நிலையில் ராஜலட்சுமி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். 

பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் காதலன் சிவக்குமாரின் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததால் மனஉளைச்சலில் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. அவர் இறந்த சோகத்தில் இருந்த காதலன் சிவக்குமாரும் இருசக்கர வாகன விபத்தில் சிக்கி காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த சில மாதங்களாக போலீசார் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

ஸ்ரீரங்கம் யாத்திரி நிவாஸில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொ*லை.! வெளியான அதிர்ச்சி காரணம்!
திருச்சியில் முதல்வர் இருக்கும் போதே பயங்கரம்! காவலர் குடியிருப்பில் இளைஞர் ஓட ஓட விரட்டி படுகொ*லை! அலறி ஓடிய பொதுமக்கள்