காவலர்களுக்கு கவர் கொடுத்த விவகாரம்... திருச்சியில் சிபிசிஐடி விசாரணை தொடக்கம்... பீதியில் திமுக!

By Kanimozhi Pannerselvam  |  First Published Mar 29, 2021, 7:54 PM IST

இது தொடர்பாக காவல் நிலையங்களில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைச் சேகரித்து, விசாரணை நடைபெற்று வருகிறது. 


திருச்சியில் காவலர்களின் ஓட்டுக்காக பதவி வாரியாக காவலர்களுக்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை கவரில் வைத்து  தி.மு.கவின் முதன்மை செயலாளர் நேரு ரகசியமாக பணம் பட்டுவாடா செய்தது அம்பலமானது. திருச்சியில் உள்ள காவல் நிலையங்களில் காவலர்களுக்கு பணம் வழங்கியதாக தி.மு.கவின் முதன்மை செயலாளர்  நேரு மீது சுமதப்பட்ட குற்றசாட்டு உண்மை என்று திருச்சி மாநகர காவல் ஆணையர் செய்த விசாரணையில் தெரியவந்தது. ஆனால் பணப்பட்டுவாடா விவகாரத்திற்கும் தனக்கும் எவ்வித சம்பந்தம் இல்லை என்று கே.என்.நேரு தெரிவித்து வருகிறார். அதிமுக தன் மீது வீண்பழி போடுவதாகவும் தன்னை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற முடியாது என்பதால் குறுக்கு வழியில் வெற்றி பெற அதிமுக முயற்சி செய்வதாகவும் கே.என்.நேரு குற்றச்சாட்டினார். 

Tap to resize

Latest Videos

undefined

இந்நிலையில் ஆணையர் லோகநாதன், மேற்கு தொகுதிக்குட்பட்ட தில்லைநகர், உறையூர், அரசு மருத்துவமனை, எடமலைப்பட்டி புதூர் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் பணத்துடன் கூடிய கவர்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட காவலர்களிடம் விசாரணை நடத்தியதையடுத்து, தில்லைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், எழுத்தர் சுகந்தி, அரசு மருத்துவமனை சப்-இன்ஸ்பெக்டர் மாதரசி ஸ்டெல்லாமேரி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலாஜி, நுண்ணறிவுபிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சங்கரன், கலியமூர்த்தி ஆகிய 6 பேரை பணியிடை நீக்கம் செய்து ஆணையர் லோகநாதன் உத்தரவிட்டார்.

8 பேர் மீதும் மாநகர குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக காவல் நிலையங்களில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைச் சேகரித்து, விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. சென்னையிலிருந்து சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ஒரு குழு திருச்சிக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

click me!