நீதிமன்ற உத்தரவை அலட்சியப்படுத்திய காவல்துறை அதிகாரி..! அதிரடி நடவடிக்கை எடுத்த நீதிபதி..!

By Manikandan S R S  |  First Published Sep 27, 2019, 1:28 PM IST

திருச்சி அருகே வழிப்பறி வழக்கில் சாட்சிகளுடன் ஆஜராகாத காவல்துறை அதிகாரிக்கு அபராதம் விதித்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.


திருச்சி அருகே வழிப்பறி வழக்கில் சாட்சிகளுடன் ஆஜராகாத காவல்துறை அதிகாரிக்கு அபராதம் விதித்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே இருக்கிறது இடையபட்டி. இந்த ஊரைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி சக்திவேல். கடந்த 2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சூர்யா என்பவர் அரிவாளை காட்டி மிரட்டி சக்திவேலிடம் இருந்த ரூபாய் 2500ஐ வழிப்பறி செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து சக்திவேல் துவரங்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

Tap to resize

Latest Videos

undefined

அந்த புகாரின் அடிப்படையில் துவரங்குறிச்சி காவல்துறை அதிகாரி சூர்யா மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தார். இது சம்பந்தமான வழக்கு திருச்சி முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் காவல்துறை அதிகாரி சாட்சிகளுடன் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் அவர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

இதனால் அவருக்கு ரூபாய் 2000 அபராதம் விதித்து திருச்சி மாவட்ட நீதிபதி ஆனந்தன் உத்தரவிட்டுள்ளார். சாட்சிகளுடன் ஆஜராகாத காவல்துறை அதிகாரிக்கு நீதிமன்றம் அபராதம் விதித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
 

click me!