பிளான் பி இல்லாமல் இருக்கிறோம்.. இயந்திரம் மூலம் மீட்புப்பணி தொடர்ந்தால் மக்களை ஏமாற்றும் செயலாக இருக்கும்..! ஜோதிமணி எம்பி கருத்து..!

By Manikandan S R SFirst Published Oct 28, 2019, 10:26 AM IST
Highlights

இது குறித்து கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, பிளான் பி இல்லாமல் மீட்பு பணி நடைபெற்று வருவதாகவும் இயந்திரத்தால் முடியாதபட்சத்தில் மீட்புக்குழுவினரிடம் மாற்ற வழி இல்லை என்றும் தெரிவித்தார். இனிமேலும் இயந்திரம் மூலம் மீட்பு பணியை தொடர்வது மக்களை ஏமாற்றும் செயலாக இருப்பதாக கூறிய அவர் முதல்வர் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு நடவடிக்கை குறித்து ஆலோசிக்க வேண்டும் என்றார்.

திருச்சி அருகே இருக்கும் நடுக்காட்டு பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ராட்சச இயந்திரங்கள் மூலமாக குழந்தையை வைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஆழ்துளை கிணறு அமைந்த பகுதி கடினமான பாறைகளை கொண்டிருப்பதால் இயந்திரங்களும் பழுதாகி திணறி வருகிறது. இதனால் அடுத்து என்ன செய்வது என்று மீட்புக்குழுவினர் அரசுடன் ஆலோசனைகள் ஈடுபட்டிருக்கின்றனர்.

இது குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் கூறும்போது,  திட்டமிட்டபடி இரண்டு இயந்திரங்கள் மூலம் பலம் கொண்ட பாறைகளை உடைக்க முடியவில்லை என்றும் பாறைகள் மிகவும் கடினமாக இருப்பதாகவும் தெரிவித்தார். அனைத்து நிலைகளையும் ஆராய்ந்து தற்போது இறுதி முடிவு எடுக்க வேண்டிய தருணத்தில் இருப்பதாக கூறியிருந்தார்.

இந்த நிலையில் இது குறித்து கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, பிளான் பி இல்லாமல் மீட்பு பணி நடைபெற்று வருவதாகவும் இயந்திரத்தால் முடியாதபட்சத்தில் மீட்புக்குழுவினரிடம் மாற்ற வழி இல்லை என்றும் தெரிவித்தார். இனிமேலும் இயந்திரம் மூலம் மீட்பு பணியை தொடர்வது மக்களை ஏமாற்றும் செயலாக இருப்பதாக கூறிய அவர் முதல்வர் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு நடவடிக்கை குறித்து ஆலோசிக்க வேண்டும் என்றார்.

click me!