Illicit Liquor | திருச்சியில் 250 லிட்டர் கள்ளச்சாராயம் அழிப்பு; நள்ளிரவில் அதிரடி காட்டிய ஆட்சியர்

By Velmurugan s  |  First Published Jun 22, 2024, 1:39 PM IST

திருச்சியில் சட்டவிரோதமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த கள்ளச்சாராய ஊறல்களை மாவட்ட ஆட்சியர் நள்ளிரவில் அதிகாரிகளோடு சென்று அழித்தார்.


கள்ளக்குறிச்சியில் கள்ள சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு காவல்துறை மற்றும் மது விலக்கு அமலாக்கத்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதனிடையே திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், பச்சைமலை அருகில் உள்ள நெசக்குளம் பகுதியில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த தகவலின் பேரில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார்  ஆகியோர் நேற்று இரவு (21.06.2024) பச்சை மலைப் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். 

Tap to resize

Latest Videos

undefined

தமிழகத்தில் கள்ளச்சாராய சாம்ராஜியத்தை அறிமுகப்படுத்தியதே கருணாநிதி தான்; ஹெச்.ராஜா ஆவேசம்

அப்போது அங்கு இருந்த 250 லிட்டர்  கள்ளச்சாராயத்தை கீழே ஊற்றி அழித்தனர். அதனைத் தொடர்ந்து அந்த பகுதி மக்களை அழைத்து கள்ளச்சாரயத்தின் தீமைகளை எடுத்து கூறியதைத் தொடர்ந்து அக்கிராமத்தைச் சேர்ந்த அனைவரும் மாவட்ட ஆட்சியர் முன்பாக மது போதைக்கு எதிராக இனி ஒருபோதும் எங்கள் கிராமத்தில் கள்ளச்சாராய உற்பத்தி நடக்காது, அதனை அனுமதிக்க மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்வில் ஏராளமான காவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக 3 கிலோமீட்டர் தூரம் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், எஸ் பி வருண்குமார் இருவரும் இரு சக்கர வாகனத்தில் சென்று சாராய ஊறலை அழித்தனர். மேலும் அந்த பகுதி மக்கள் சாராய ஊறலை சுக துக்க நிகழ்வுகளுக்கு யாரும் போட அனுமதிக்க மாட்டோம், விடவும் மாட்டோம் என்று உறுதிமொழியை மாவட்ட ஆட்சியர், எஸ் பி முன் எடுத்துக்கொண்டனர். 

விருதுநகர் தொகுதியில் நாங்கள் சூழ்ச்சியால் தோற்கடிக்கப்பட்டுள்ளோம் - ராஜேந்திர பாலாஜி விளக்கம்

பின்பு பேசிய மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்பியின் கண்காணிப்பு குழுவினர் நடத்திய அதிரடி சோதனையில் பச்சை மலை ஓடை அருகே சாராய ஊறல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அதனை அழித்துள்ளோம். பச்சை மலையில் துக்க நிகழ்வுகளுக்கு இது போன்ற செயலில் சிலர் ஈடுபடுவது வழக்கமாக வைத்துள்ளனர். இனி திருச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் ஊறல் இல்லாத நிலையை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

click me!