அமைச்சர் நேருவின் செயலால் தனக்கு தானே மரண செய்தியை தெரிவித்த திமுக எம்எல்ஏ; திருச்சியில் பரபரப்பு

By Velmurugan s  |  First Published Jun 15, 2024, 11:55 AM IST

திருச்சி மாவட்டம் லால்குடியில் அமைச்சர் நேரு ஆய்வு செய்த நிலையில், லால்குடி திமுக சட்டமன்ற உறுப்பினர் சௌந்தர பாண்டியன் தனது முகநூல் பக்கத்தில் தாம் இறந்துவிட்டதாக பதிவிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


திருச்சி மாவட்டம், லால்குடி சட்டமன்ற தொகுதியில்  தொடர்ந்து மூன்றாவது முறை சட்டமன்ற உறுப்பினர் ஆக இருப்பவர் சௌந்தர பாண்டியன். மூத்த அமைச்சர்  கே.என்.நேருவின் ஆதரவாளராக இருந்து வந்தார். இவர் கடந்த சில மாதங்களாக பெரும்பாலும் அரசு விழாக்கள் மற்றும் அமைச்சர்கள் தலைமையில் நடைபெறும் முக்கிய  விழாக்கள், கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை என கூறப்படுகிறது. 

இந்த நிலையில் திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதியில் புதிய பேருந்து நிலையம், வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் புதிய அலுவலகம் மற்றும் சார் பதிவாளர் அலுவலக கட்டிடம் கட்டுவதற்கான இடங்களை அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் துறை அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tap to resize

Latest Videos

undefined

Vellore: டன் கணக்கில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் - வேலூரில் பரபரப்பு

இந்த ஆய்வில் லால்குடி சட்டமன்ற உறுப்பினர் செளந்தரபாண்டியன் பங்கேற்கவில்லை. இந்த ஆய்வு  பற்றிய தகவல் மற்றும் புகைப்படங்கள் அமைச்சர் கே.என்.நேருவின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. இதனிடையே திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆக இருக்கக்கூடிய சௌந்தர பாண்டியன் இயற்கை எய்தி விட்டதால் அந்த தொகுதி காலியான இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது" என்று சட்டமன்ற உறுப்பினர் செளந்திரபாண்டியன், தனது முகநூல் கமெண்ட் பக்கத்தில் பதிவிட்டுள்ள சம்பவம், திமுகவினரிடையே பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

60 நாட்கள் தடைக்காலம் நிறைவு; கூண்டில் இருந்து விடுபட்ட பறவையாக கடலுக்குள் சீறிப்பாய்ந்த படகுகுள்

அமைச்சர் கே.என்.நேரு, தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் லால்குடி தொகுதியில் மேற்கொண்ட ஆய்வு குறித்து புகைப்படங்களுடன் பதிவுச் செய்திருந்தார். அதற்கு லால்குடி சட்டமன்ற உறுப்பினர் செளந்திரபாண்டியன், தன்னை அழைக்காத காரணத்தினால் இப்படி ஒரு கமெண்ட் பதிவிட்டு ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார். இச்சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் அந்த பதிவு முகநூல் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் திருச்சி திமுக மற்றும் அரசியல் வட்டாரத்திலும்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

click me!