7 நாட்கள் அடைக்கப்படும் டாஸ்மாக்..! அதிர்ச்சியில் குடிமகன்கள்..!

By Manikandan S R SFirst Published Mar 23, 2020, 5:03 PM IST
Highlights

தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுபான கடைகளை ஒட்டியுள்ள மதுபான பார்கள், நட்சத்திர அந்தஸ்து ஓட்டலில் உள்ள பார்கள் அனைத்தும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கபட்டதை அடுத்து நாளை முதல் மூடப்படுகிறது.

கொரோனா நோய் பரவுதலை தடுக்கும் வகையில் தமிழகத்தில் இருக்கும் அனைத்து மாவட்ட எல்லைகளையும் மூட அரசு தற்போது முடிவெடுத்துள்ளது. இதுகுறித்து சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை மாலை 6 மணி முதல் 31 ம் தேதி வரை அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்படுவதாக அறிவித்துள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

144 தடை உத்தரவு பிறப்பிக்கபட்டிருக்கும் நாட்களில் அத்தியாவசிய பொருட்களான பால், மளிகை, மருந்தகம் போன்றவை கிடைப்பதில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது எனவும் அரசு அறிவித்துள்ளது. வீடுகள் தவிர்த்து விடுதிகளில் தங்கியிருப்பவர்களுக்கு உணவுகள் கிடைக்கும் வகையில் உணவகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் இருக்கும் மதுக்கடைகள் அனைத்தும் 31ம் தேதி வரை மூடப்படுகிறது.

தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுபான கடைகளை ஒட்டியுள்ள மதுபான பார்கள், நட்சத்திர அந்தஸ்து ஓட்டலில் உள்ள பார்கள் அனைத்தும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கபட்டதை அடுத்து நாளை முதல் மூடப்படுகிறது. 7 நாட்களுக்கும் மேலாக மதுக்கடைகள் மூடப்பட இருப்பதால் குடிமகன்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இதனால் தங்களுக்கு தேவையான மது வகைகளை வாங்கி வைக்க இப்போதே டாஸ்மாக் கடைகளில் குவிந்து வருகின்றனர். கொரோனா பரவுதலை தடுக்கும் வகையில் யாரும் கூட்டமாக ஒன்று கூட கூடாது என அறிவித்திருக்கும் நிலையில் குடிமகன்களின் இச்செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

click me!