விக்ரம் லேண்டருக்காக அழுத இஸ்ரோ சிவனை விட... கதற வைக்கும் சுர்ஜித்தின் தாய் விடும் கண்ணீர்..!

ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது குழந்தை  சுர்ஜித் மீண்டுவர நாடே பிரார்த்தனை செய்து வருகிறது. சுர்ஜித்துக்காக பலரும் உருகித் தவிக்கிறார்கள். 

Surjit's mother crying power for Vikram Lander sivan

இந்த நிலையில் சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்தது குறித்து பலரும் சமூகவலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதில், விக்ரம்  லேண்டருக்காக அழுத இஸ்ரோ சிவன் விட்ட கண்ணீரைவிட சுர்ஜித்தின் தாய் வடிக்கும் கண்ணீருக்கு சக்தி அதிகம். 27 அடியில் தெரிந்தது நமது  முட்டாள்தனத்தின் விஞ்ஞான வளர்ச்சி. மக்கள் மனதில் ஆழத்திற்கு சென்று விட்டாயடா. போதும் 80 அடி ஆழம் போனது. மேலே எழுந்து வா. உனக்காக காத்திருக்கும் நபர்களில் நானும் ஒரு தந்தை.Surjit's mother crying power for Vikram Lander sivan

300 அடி ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவனை சில நிமிடங்களில் மீட்கும் சீனர்கள். அறிவியில் வளர்ச்சியில் நாம் இன்னும் 10 % கூட முன்றேவில்லை என்பது வருத்தபட வேண்டிய நிலைமை. பிற்காலத்தில் இந்த மாதிரியான சம்பவம் ஏற்படாமல் இருக்க ஆழ்துளை கிணற்றின் துளையிடும் விட்டத்தின் அளவு அதிகபட்சமாக 6 இன்சுக்கு மேல் இருக்க கூடாது. இதனை அரசானையாக வெளியிடவேண்டும் என்பது எனது கருத்து.

Latest Videos

10000 அடி ஆழம் சென்று மீத்தேன் எடுக்கும் நாட்டில். 70அடி ஆழம் சென்று குழந்தையை காப்பற்ற தொழில்நுட்பம் இல்லை ஏன்? இது தானா வளர்ச்சி? இறைவா எங்கள் அனைவரின் உயிரில் ஒவ்வொரு ஆயுளை குறைத்து எடுத்து கொள் இந்த பிஞ்சு உயிரை மீட்டு எங்களிடம் கொடு உன்னை விட சக்தி வாய்ந்த கருவி வேறொன்று இல்லை இறைவா எங்கள் செல்வத்தை மீட்டு கொடு அந்த பிஞ்சு மனம் எப்படி பதறுகிறானோ இறைவா கருணை காட்டு’’ எனப்பதிவிட்டுள்ளனர். விக்ரம் லேண்டரில் பின்னடைவு ஏற்பட்டபோது இஸ்ரோ தலைமை விஞ்ஞானி சிவன் கண்ணீர் விட்டு கதறி அழுதார். 

அவரை கட்டியணைத்து பிரதமர் மோடி ஆறுதல் கூறினார். அதனை பார்த்த இந்திய மக்கள் மனம் கலங்கி போனார்கள். இப்போது சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் இருக்கும் நிலையில் அவரது தாயார் கலா மேரி விடும் கண்ணீர் அதைவிட, இந்திய மனங்களை கறைய வைத்துள்ளதாக அர்த்தம் கொள்ளும் வகையில் பதிவிட்டு வருகின்றனர். 

vuukle one pixel image
click me!
vuukle one pixel image