5 மாணவிகள்..! தோழிகளுடன் சேர்ந்து தோட்டத்தில் அடித்த லூட்டி..! அதிர்ந்து போன பெற்றோர்..!

By Manikandan S R S  |  First Published Feb 22, 2020, 1:29 PM IST

12 வகுப்பு படிக்கும் 5 மாணவிகள் இடம்பெற்றிருக்கும் காணொளி ஒன்று கடந்த சில நாட்களாக வாட்ஸ் அப்பில் பரவி வருகிறது. அந்த காணொளியில் பள்ளி சீருடை அணிந்திருக்கும் அவர்கள் தோட்டம் ஒன்றில் வைத்து பீர் அருந்தி கொண்டிருக்கின்றனர்.


அரியலூரில் இருக்கும் ஒரு அரசு உதவிபெறும் பள்ளியில் படிக்கும் மாணவிகள் சிலர் பீர் குடித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அரியலூரில் அரசு உதவிபெறும் மேல்நிலையப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு அப்பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தநிலையில் இப்பள்ளியில் 12 வகுப்பு படிக்கும் 5 மாணவிகள் இடம்பெற்றிருக்கும் காணொளி ஒன்று கடந்த சில நாட்களாக வாட்ஸ் அப்பில் பரவி வருகிறது. அந்த காணொளியில் பள்ளி சீருடை அணிந்திருக்கும் அவர்கள் தோட்டம் ஒன்றில் வைத்து பீர் அருந்தி கொண்டிருக்கின்றனர்.

Tap to resize

Latest Videos

undefined

அதை மாணவிகளின் தோழர்கள் படம்பிடிக்க, அது சமூக ஊடகங்களில் பரவி தற்போது வைரலாகி இருக்கிறது. மாணவிகளின் இச்செயல் பள்ளி நிர்வாகத்தின் கவனத்திற்கு சென்றது. அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட மாணவிகளின் பெற்றோரை அழைத்து விசாரணையில் ஈடுபட்டனர். இதையடுத்து மாணவிகள் பள்ளிக்கு வர தடைவிதிக்கப்பட்டது. அவர்களை பள்ளியை விட்டு நீக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும்நிலையில் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு பொது தேர்வை எழுத அனுமதிப்பது குறித்த பரிசீலித்து வருகின்றனர்.

விளையாட்டாக செய்த காரியம் வினையாகி போனதால் மாணவிகளும் அவர்களது பெற்றோரும் பரிதவித்து வருகின்றனர். இதேபோன்ற மற்றொரு காணொளியில் பள்ளி மாணவன் ஒருவரும், மாணவி ஒருவரும் உதட்டோடு உதடு வைத்த நீண்டநேரமாக முத்தமிட. அதை மற்றொரு மாணவி படம் பிடிக்கிறார். அதுவும் தற்போது வைரலாகி இருக்கிறது. எனினும் அவர்கள் யார்? எந்த பள்ளி என்கிற விபரம் தெரியவில்லை. அவர்களின் பேச்சுவழக்கை வைத்து திருச்சி சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதை கல்வித்துறை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். அதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.

படிக்கும் வயதில் வாழ்வை சீரழிக்கும் பள்ளிமாணவர்களின் இது போன்ற செயல்பாடுகள் அவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி வருகிறது.

click me!