சக்தி தலங்களில் முதன்மையானது, பிரசித்தி பெற்றதளமான சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் தினமும் பல ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்துவிட்டு தங்களது நேர்த்திக்கடனை காணிக்கை உண்டியல்களில் செலுத்தி விட்டு செல்வார்கள்.
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ரூ. 82 லட்சம் ரொக்கம், 2 கிலோ 207 கிராம் தங்கம், 2 கிலோ 950 கிராம் வெள்ளி பக்தர்கள் காணிக்கை செலுத்தினர்.
சக்தி தலங்களில் முதன்மையானது, பிரசித்தி பெற்றதளமான சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் தினமும் பல ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்துவிட்டு தங்களது நேர்த்திக்கடனை காணிக்கை உண்டியல்களில் செலுத்தி விட்டு செல்வார்கள்.
அப்படி கடந்த 15 நாட்களில் பக்தர்களால் செலுத்தப்பட்ட காணிக்கை உண்டியல்களை கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் கோவில் ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் சமூக ஆர்வலர்கள் கோவில் மண்டபத்தில் எண்ணப்பட்டது.
இதில் ரூ 82 லட்சத்து 57 ஆயிரத்து 958 ரூபாய் ரொக்கமும், 2 கிலோ 207 கிராம் தங்கமும், 2 கிலோ 950 கிராம் வெள்ளியும், அயல் நாட்டு நோட்டுகள் 114ம், அயல் நாட்டு நாணயங்கள் 683ம் காணிக்கையாக பெறப்பட்டது என கோவில் இணை ஆணையர் கல்யாணி தகவல் தெரிவித்துள்ளார்.