அப்ப இதுதான் லலிதா ஓனரோட நிஜ குரலா..!! அதிர்ந்து போன செய்தியாளர்கள்..!

By vinoth kumar  |  First Published Oct 3, 2019, 9:39 AM IST

எந்த டிவியை திறந்தாலும் எந்த செய்தித்தாள் மற்றும் வாரப் பத்திரிகைகளிலும் சமீபகாலமாக இவருடைய விளம்பரத்தை பார்க்காமல் இருக்க முடியாது அந்த அளவிற்கு கோடிக்கணக்கான பட்ஜெட்டை விளம்பரத்திற்காக ஒதிக்கி அதில் யாரையும் நடிக்க விடாமல் தானே ஹீரோ போன்று அவதாரமெடுத்து தனது நகை கடைக்கான விளம்பர தூதுவராக வளம் வந்தவர்தான் கிரண்குமார்.


எந்த டிவியை திறந்தாலும் எந்த செய்தித்தாள் மற்றும் வாரப் பத்திரிகைகளிலும் சமீபகாலமாக இவருடைய விளம்பரத்தை பார்க்காமல் இருக்க முடியாது அந்த அளவிற்கு கோடிக்கணக்கான பட்ஜெட்டை விளம்பரத்திற்காக ஒதிக்கி அதில் யாரையும் நடிக்க விடாமல் தானே ஹீரோ போன்று அவதாரமெடுத்து தனது நகை கடைக்கான விளம்பர தூதுவராக வளம் வந்தவர்தான் கிரண்குமார்.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் ஆந்திர மாநிலம் நெல்லூர் குடிபெயர்ந்து அங்கிருந்து அருகில் உள்ள மிகப்பெரிய மெட்ரோபாலிட்டன் செடியான சென்னையில் தனது வியாபாரத்தை தொடங்கினார். பின்னர், இலங்கையைச் சேர்ந்தவர்கள் நடத்தி வந்த லலிதா ஜூவல்லரி கையகப்படுத்தி சென்னையிலேயே குடியேறினார். கிரண்குமார் வசம் வந்த லலிதா ஜுவல்லரி ஆந்திராவைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்று அதிவேகமாக வளர்ந்தது. 

Tap to resize

Latest Videos

undefined


அரசியல் மற்றும் தொழில்துறை நிபுணர்கள் சினிமா காரர்கள் என அத்தனை துறையில் உள்ளவர்களையும் தனது நண்பர்கள் ஆக்கிக்கொண்டார் கிரண்குமார். அடையார் ஆனந்த பவன் மற்றும் யுனிவர்சல் பூர்விகா மொபைல் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது கிளைகளை அடுத்தடுத்து ஆரம்பிக்க தொடங்கிய நிலையில் நாமும் என் இதேபோன்று பல கிளைகளை நடத்தி வெற்றிபெற கூடாது என நினைத்தார் கிரண்குமார். அதன் அடிப்படையில்தான் தனக்கு ஏற்கனவே இருந்த அரசியல் பிரமுகர்களின் உதவி மற்றும்  முதலீடு பெற்று சென்னையில் பல இடங்களிலும் திருவள்ளூர், திருப்பதி, விசாகபட்டினம், ஹைதராபாத், திருச்சி என 50க்கும் மேற்பட்ட கிளைகளை அடுத்தடுத்து கிரண்குமார் திறந்துகொண்டே வந்தார்.

ஒரு கட்டத்தில் என்ன உள்ளே வருகிறது எவ்வளவு வெளியே செல்கிறது என்ற கணக்கு கூட புரியாத அளவிற்கு கிரண்குமார் வர்த்தக சாம்ராஜ்யம் வெறும் மூன்றே வருடங்களில் நூறு மடங்கு அதிகரித்து உள்ளதாக கூறுகிறார்கள். நகைக்கடை வட்டாரங்களை சேர்ந்த முக்கிய நபர்கள் இந்த நிலையில்தான் திருச்சியின் மையப் பகுதியில் அமைந்துள்ள லலிதா ஜுவல்லரி துளை போட்டு குழந்தைகள் அணியும் கார்ட்டூன் விளையாட்டு முகமூடிகளை அணிந்துகொண்டு காமெடியாக பாக்யராஜ் பட பாணியில் மொத்தமாக மிச்சம் மீதி வைக்காமல் வழிச்சு வாரிக்கொண்டு சென்றுவிட்டார்கள் கொள்ளையர்கள்.

இதுகுறித்து தகவலறிந்த நகைக் கடை உரிமையாளரான கிரண்குமார் சுமார் 5 மணி நேரம் கழித்து திருச்சி சென்றடைந்து கொள்ளையடிக்கப்பட்ட கடையை பார்வையிட்டார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கிரண்குமார் காவல்துறை நல்ல ஒத்துழைப்பு அளிப்பதாகவும் கிட்டத்தட்ட 13 கோடி ரூபாய் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார் அப்போது முதன்முறையாக கிரண் குமார் குரலை கேட்ட செய்தியாளர்கள் மற்றும் அங்கிருந்து நபர்கள் சற்று ஆடித்தான் போனார்கள் காரணம் டிபிக்கல் வடமாநிலத்தை சேர்ந்த மார்வாடிகள் மற்றும் நகை கடைக்காரர்கள் பேசுவதைப் போன்று தமிழை தட்டுத்தடுமாறி அதே நேரத்தில் கீச் கீச் குரலில் பேசினார் அப்போதுதான் தெரிந்தது கிரண்குமார் விளம்பரத்தில் தோன்றி பேசுவது அவர் குரலில் அல்ல அது டப்பிங் வாய்ஸ் என்று எப்போதுமே நிழல் வேறு நிஜம் வேறு.

click me!