திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள லலிதா ஜூவல்லரியில் பல கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள லலிதா ஜூவல்லரியில் பல கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் இருக்கக்கூடிய ஜோசப் கல்லூரிக்கு சொந்தமான இடத்தில் லலிதா ஜூவல்லரி நகைக்கடை இயங்கி வருகிறது. இது மூன்று தளங்களை கொண்டது. இன்று காலை 9 மணியளவில் முன்பக்க கதவை திறந்து ஊழியர்கள் பார்க்கம் போது கீழ் தளத்தில் உள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. கதவை உடைக்காமல் எப்படி கொள்ளை நடந்தது குறித்து ஊழியர்கள் பார்த்த போது பின்பக்க சுவரில் துளையிட்டு அதன்மூலமாக கொள்ளையர்கள் இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரிவந்துள்ளது.
undefined
மேலும், கீழ் தளத்தில் இருந்த அனைத்து நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கொள்ளை போன நகைகளின் மதிப்பு சுமார் 50 கோடிக்கு இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 35 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் விரைந்துள்ளனர். மேலும், திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் நேரில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். மோப்ப நாய்கள் உதவியுடனும், அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டும் கொள்ளையர்களை தேடும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக போலீசார் கூறுகையில் அதிகாலை நேரத்தில் இந்த கொள்ளை சம்பவம் நடைபெற்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து வருகின்றனர். இந்த கொள்ளையில் வடமாநிலத்தவர்கள் ஈடுபட்டிருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.