நடுக்காட்டுப்பட்டியில் தற்போது மழை..! மீட்புப்பணிகள் தொய்வின்றி தீவிரம்..!

By Manikandan S R S  |  First Published Oct 28, 2019, 11:43 AM IST

ஆழ்துளை கிணறு இருக்கும் நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் தற்போது மழை பெய்துவருகிறது. இதனால் மீட்பு பணிகளில் இடையூறு ஏற்பட்டுள்ளது. மழை நீர் பள்ளம் தோண்டப்பட்ட இடத்தில் புகாதவாறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.


திருச்சி அருகே இருக்கும் நடுக்காட்டுப்பட்டியில் 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சம்பவம் இந்தியா முழுவதும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த 64 மணிநேரத்திற்கு மேலாக குழந்தையை மீட்பதற்காக மீட்புப் படையினர் தீவிரமாக போராடி வருகின்றனர். 

Tap to resize

Latest Videos

undefined

ராட்சத இயந்திரங்கள் மூலமாக ஆழ்துளை கிணற்றின் அருகே குழி தோண்டி அதனுள்ளே மூன்று வீரர்கள் அனுப்பப்பட்டு குழந்தை மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. பள்ளம் தோண்டப்படும் இடத்தில் அதிகமான அளவில் பாறைகள் இருப்பதால் மீட்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தற்போது வரையிலும் 40அடி தோண்டப்பட்டு இருப்பதாக தகவல் வந்திருக்கிறது.

இதனிடையே ஆழ்துளை கிணறு இருக்கும் நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் தற்போது மழை பெய்துவருகிறது. இதனால் மீட்பு பணிகளில் இடையூறு ஏற்பட்டுள்ளது. மழை நீர் பள்ளம் தோண்டப்பட்ட இடத்தில் புகாதவாறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மழையையும் பொருட்படுத்தாமல் குழந்தையை மீட்டு மேலே கொண்டு  மீட்பு படையினர் போராடி வருகின்றனர்.

click me!