ஏப்ரல் 28 முதல் 30-ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு உள்ளது. ஆந்திராவை ஒட்டி இருக்கும் மேற்கு மத்திய வங்கக்கடல், கேரளாவை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 50 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அடுத்த 24 மணி நேரத்துக்கு கடலுக்கு செல்ல வேண்டாம்.
தமிழகத்தில் நிலவி வரும் வெப்பச்சலனம் காரணமாக தற்போது பல்வேறு மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. கோடை வெயிலால் அவதிப்பட்டு வந்த மக்களுக்கு மழை உற்சாகத்தை கொடுத்துள்ளது. இந்த நிலையில் அடுத்து வரும் சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என தெரிவிக்கப்பபட்டுள்ளது.
undefined
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறும் போது, தமிழகத்தில் நிலவி வரும் வெப்பச்சலனம் மற்றும் குமரிக்கடலை ஒட்டியிருக்கும் பகுதிகளில் காணப்படும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்துவருகிறது. கடந்த இரண்டு நாட்களாக இடி, மின்னலுடன் பெய்து வந்த மழை திங்கள்கிழமையும் மாநிலத்தின் சில இடங்களில் நீடிக்கக் கூடும். திருச்சி, வேலூர் உட்பட தமிழகத்தின் உள் மாவட்டங்களின் சில பகுதிகளில் பலத்தமழை பெய்யவும் வாய்ப்பு இருக்கிறது.
மேலும் ஏப்ரல் 28 முதல் 30-ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு உள்ளது. தலைநகர் சென்னையில் வானம் மேகமூட்டமாக காணப்படும். ஆந்திராவை ஒட்டி இருக்கும் மேற்கு மத்திய வங்கக்கடல், கேரளாவை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 50 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அடுத்த 24 மணி நேரத்துக்கு கடலுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் பெரம்பலூா் மாவட்டம் செட்டிகுளத்தில் 60 மி.மீ. மழையும் தரமணி, சென்னை டிஜிபி அலுவலகப் பகுதி, கரூா் மாவட்டம் மாயனூா், கிருஷ்ணராயபுரத்தில் தலா 50 மி.மீ. மழை பதிவானது.