அட கடவுளே.. நிறைமாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை... கணவரிடம் துருவி துருவி விசாரிக்கும் போலீஸ்..!

By vinoth kumar  |  First Published Sep 9, 2021, 8:37 PM IST

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே காட்டுப்புத்தூர் ஐயப்பன் நகரை சேர்ந்தவர் சக்திவேல் (28). இவரது மனைவி சாருமதி(23). இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகளாகிறது. இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. தற்போது சாருமதி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். 


திருச்சி அருகே நிறைமாத கர்ப்பிணி தூக்கில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே காட்டுப்புத்தூர் ஐயப்பன் நகரை சேர்ந்தவர் சக்திவேல் (28). இவரது மனைவி சாருமதி(23). இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகளாகிறது. இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. தற்போது சாருமதி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். கருத்து வேறுபாடு காரணமாக வீட்டில் தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

Tap to resize

Latest Videos

undefined

இந்நிலையில், சாருமதி நேற்று வீட்டில் யாரும் இல்லாத  நேரத்தில் சேலையில் தூக்கில் மர்மமான முறையில் சடலமாக தொங்கினார். அப்போது அங்கு வந்த சாருமதியின் சகோதரி சடலமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்து கதறினார். பின்னர், போலீசுக்கு தெரியாமல் உடலை அடக்கம் செய்வதற்காக சாருமதியின் கணவர் சக்திவேல் மற்றும் உறவினர்கள் காட்டுப்புத்தூர் அடுத்த மூங்கில்பட்டி கிராமத்திற்கு  சாருமதியின் உடலை எடுத்து சென்றனர். 

இது தொடர்பாக பெற்றோர் மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சாருமதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இன்று உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்கள் ஒப்படைக்கப்படுகிறது.  மேலும் கர்ப்பிணி சாவுக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருமணமாகி 3 வருடங்களே ஆவதால் முசிறி ஆர்டிஓ சாருமதியின் கணவர் மற்றும் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகிறார். 

click me!