விஷயத்தை அறிந்து விமான நிலையத்திலேயே கதறி அழுத ஒலிம்பிக் வீராங்கனை தனலட்சுமி.. அப்படி என்ன நடந்தது?

By vinoth kumar  |  First Published Aug 8, 2021, 11:52 AM IST

தனலட்சுமி வீட்டார் யாரும் இதை அவருக்கு தெரிவிக்கவில்லை. இந்த தகவலை தனலட்சுமிக்கு சொன்னால் அவரால் தாங்க முடியாமல் விளையாட்டுப் போட்டியிலிருந்து கவனம் சிதறி விடுவார் என அக்கா உயிரிழந்த தகவலை குடும்பத்தினர் யாரும் தெரியப்படுத்தாமல் இருந்துவிட்டனர்.


ஒலிம்பிக் தடகள போட்டியில் பங்கேற்று திருச்சி விமான நிலையம் வந்த தனலட்சுமி, அவருடைய அக்கா உயிரிழந்த செய்தியை கேட்டு விமான நிலையத்திலேயே உடைந்து கதறி அழுத சம்பவம் அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்தது. 

2021-ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் டோக்கியோவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், அதில் கலந்துக்கொள்ள தமிழகத்தை சேர்ந்த வீராங்கனை தனலட்சுமி என்பவரும் சென்றிருந்தார். இந்நிலையில், டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டியில் தனலட்சுமி பங்கேற்றிருந்த சமயத்தில் அவர் அக்கா கடந்த மாதம் ஜூலை 12ம் தேதின்று திடீரென உயிரிழந்துவிட்டார். 

Tap to resize

Latest Videos

undefined

ஆனால், தனலட்சுமி வீட்டார் யாரும் இதை அவருக்கு தெரிவிக்கவில்லை. இந்த தகவலை தனலட்சுமிக்கு சொன்னால் அவரால் தாங்க முடியாமல் விளையாட்டுப் போட்டியிலிருந்து கவனம் சிதறி விடுவார் என அக்கா உயிரிழந்த தகவலை குடும்பத்தினர் யாரும் தெரியப்படுத்தாமல் இருந்துவிட்டனர்.

தற்போது போட்டி முடிந்து விமானம் மூலம் தமிழகம் திரும்பிய தனலட்சுமி, அங்கே வரவேற்க அக்கா ஏன் வரவில்லை எனக் கேட்டுள்ளார். அப்போதுதான் அக்கா இறந்த தகவலை குடும்பத்தினர் அவரிடம் தெரிவித்துள்ளனர். இந்த செய்தியை கேட்ட தனலட்சுமி விமான நிலையத்திலேயே நிலைகுலைந்து அழுத சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியது. மேலும், குடும்பத்தினரும் உறவினர்களும் அவருக்கு ஆறுதல் சொல்லி தேற்றி, வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

click me!