கடுமையான காய்ச்சலுடன் தேர்தல் பணி.. பள்ளி தலைமை ஆசிரியை கொரோனாவுக்கு உயிரிழந்த பரிதாபம்..!

By vinoth kumar  |  First Published Apr 13, 2021, 5:32 PM IST

கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தலைமை ஆசிரியைக்கு விடுப்பு அளிக்காமல் தேர்தல் பணியில் ஈடுபடுத்தி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


 கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தலைமை ஆசிரியைக்கு விடுப்பு அளிக்காமல் தேர்தல் பணியில் ஈடுபடுத்தி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா 2வது அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதற்கு மத்தியிலும் கடந்த 6-ம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குச்சாவடி பணிகளில் அரசு ஊழியர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர் ஆசிரியைகள் ஈடுபடுத்தப்பட்டனர்.

Tap to resize

Latest Videos

இந்நிலையில், திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒரு அரசு  தொடக்கப் பள்ளியில் 54 வயதான தலைமை ஆசிரியை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்நலையில், சிகிச்சை பலனின்றி தலைமை ஆசிரியை உயிரிழந்தார்.

இதனால் வாக்குச்சாவடியில் அவருடன் பணியாற்றிய சக ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கலக்கத்தில் உள்ளனர். இதனிடையே, பள்ளி தலைமை ஆசிரியை கொரோனாவுக்கு பலியானது எப்படி என்பது பற்றி பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளது. தேர்தலுக்கு 3 நாட்களுக்கு முன்னதாக கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தலைமை ஆசிரியைக்கு விடுப்பு அளிக்காமல் தேர்தல் அதிகாரிகள் அவரை தேர்தல் பணியில் ஈடுபடுத்தி உள்ளனர். தேர்தல் பணியில் இருந்த போதெ உடல்நிலை மோசமானதால் தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தற்போது வெளியாகி இருப்பது ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

click me!