திருச்சி அருகே காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க வந்த சிறைத்துறை முதல்நிலை காவலர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
லால்குடி அருகே செம்பரை சோழமுத்து மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மணி. இவரது மகன் ராஜா (வயது 45). இவர் லால்குடி கிளை சிறையில் முதல் நிலை காவலராக பணியாற்றி வருகிறார். இவருடைய தம்பி நிர்மல். இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கிடையே இட பிரச்சினை மற்றும் குடும்ப பிரச்சினை இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி மகன் முத்துவுக்கும், முதல்நிலை தலைமை காவலர் ராஜாவுக்கும் நிலப் பிரச்சனையில் ஏற்பட்டு அடிதடி சம்பந்தமாக அளித்த புகாரின் பேரில் ராஜா மீது வழக்கு பதியப்பட்டு கடந்த 18 -6 -2021 ந்தேதி பணி இடை நீக்கம் செய்து அன்றிலிருந்து இன்று வரை பணியிடை நீக்கத்தில் இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 25ம் தேதி ராஜாவின் மனைவி விஜயாவை அவரது தம்பி நிர்மல் மதுபோதையில் திட்டி உள்ளார்.
undefined
இது தொடர்பாக இருதரப்பினருக்கும் ஏற்பட்ட பிரச்சினையில் லால்குடி காவல்நிலையத்தில் ராஜாவின் மனைவி விஜயா மற்றும் நிர்மல் ஆகியோர் அளித்த புகாரின் அடிப்படையில் லால்குடி காவல் துறையினர் மனு ரசீது போட்டுள்ளனர். இந்த புகார் தொடர்பாக நேற்று விசாரணைக்கு வந்த ராஜாவை லால்குடி காவல் நிலையத்தில் இருந்த ஒரு காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் சிறைத்துறை முதல்நிலை காவலர் ராஜாவை நாற்காலியோடு எட்டி உதைத்ததாகவும், விசாரணையில் ஒருதலைப் பட்சமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
துரை வைகோ சின்ன பையன், அவருக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது - மதிமுக அவைத்தலைவர் அதிரடி
இதில் அவர் மிகுந்த மன உளைச்சல் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் மீண்டும் இன்று அண்ணன் தம்பிக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இது குறித்து புகார் அளிக்க லால்குடி காவல் நிலையத்திற்கு முதல் நிலைக் காவலர் ராஜா வந்துள்ளார். பின்னர் திடீரென தான் வைத்திருந்த பெட்ரோலை தன் மீது ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைக் கண்ட காவல் துறையினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீக்காயங்களுடன் அவரை மீட்டு லால்குடி அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர்.
திண்டுக்கலில் லாரி மீது அரசு பேருந்து மோதி கோர விபத்து; சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 84 சதவீதம் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து லால்குடி காவல் துறையினர் விசாரணை செய்துவரும் நிலையில் லால்குடி காவல் நிலையத்திற்கு திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் நேரில் வந்து விசாரணை நடத்தினார்.