14 கிலோமீட்டர கடக்க 2 மணி நேரமா ?? இதுக்கு பேரு சூப்பர் பாஸ்ட் பஸ்சா ?? - காண்டான பயணிகள்.. திருச்சியில் சாலை மறியல் ...

By Asianet Tamil  |  First Published Aug 16, 2019, 11:21 AM IST

திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற தனியார் அதிவிரைவு பேருந்து ஒன்று மிகவும் மெதுவாக ஆமைவேகத்தில் சென்றதால் ,அதில் பயணம் செய்த பயணிகள் கடும் ஆத்திரம் அடைந்து சாலை மறியலில் ஈடுபட்டனர் .


நேற்றைய தினம் திருச்சியில் இருந்து சென்னை செல்வதற்காக சுமார் 40 பயணிகள் ஒரு தனியார் பேருந்தில் பயணம் செய்தனர் . அது அதிவிரைவுடன் கூடிய குளிர்சாதன பேருந்து ஆகும் . அதில் சென்றால் விரைவாக சென்றுவிடலாம் என்று பலர் நினைத்து இருந்தனர் .

Tap to resize

Latest Videos

undefined

ஆனால் நடந்தது வேறு .  திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் கிளம்பிய இந்த பேருந்து சமயபுரம் நெ.1 சுங்கச்சாவடி வரை கடக்க வேண்டிய தூரமான  14 கிலோமீட்டரை சுமார் 2 மணி நேரமாக கடந்து உள்ளது . 

இதனால் ஆத்திரம் கொண்ட பயணிகள் , ஓட்டுனரிடமும் நடத்துனரிடமும் சண்டையிட்டனர் . பேருந்து ஏசியில் ஏற்பட்ட பழுது தான் இதற்கு காரணம் என்று அவர்கள் கூறினர் .மாற்று பேருந்தும் ஏற்பாடு செய்யாததால்  ஆத்திரம் தீராத பயணிகள் , திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் செய்ய தொடங்கினர் .

இதையடுத்து சம்பவ இடத்திற்கு கொள்ளிடம் மற்றும் லால்குடி காவல் துறை வந்து பேச்சுவார்த்தை நடத்தினர் . அதை தொடர்ந்து பயணிகள் சாலை மறியலை கை விட்டனர் .

இதனால் அங்கு 15 நிமிடம் போக்குவரத்து தடைபட்டது .. 

click me!