கணவர் இறந்த துக்கத்தில் மனைவி தீக்குளித்து தற்கொலை.... தாயின் உடலை பார்த்து கதறிய 3 குழந்தைகள்..!

By vinoth kumar  |  First Published Aug 14, 2019, 3:01 PM IST

திருச்சியில் கணவர் இழந்த துக்கம் தாளாமல் மனைவி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


திருச்சியில் கணவர் இழந்த துக்கம் தாளாமல் மனைவி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே எம்.ஆர்.பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துச்செல்வன். இவரது மனைவி பிரியா (28). இவர்களுக்கு 3 ஆண் குழந்தைகள் உள்ளனர். சில மாதங்களுக்கு முன் முத்துச்செல்வன் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இளம் வயதில் கணவனை இழந்து மிகவும் சோகத்தில் இருந்த பிரியாவிற்கு உறவினர்கள் ஆறுதலாக இருந்துவந்தனர். ஆனாலும், குழந்தைகளை பார்த்துக்கொண்டு சிறுது காலம் கவலைகள் மறந்து வாழ்ந்து வந்துள்ளார்.

Tap to resize

Latest Videos

undefined

 

இந்நிலையில், பிரியா நேற்று மாலை தன் குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு அவரின் கணவன் உடல் அடக்கம் செய்த மயானத்திற்கு சென்றுள்ளார். அங்கு யாரும் இல்லாததால் தன் மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதனால் உடல் முழுவதும் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த தாயின் உடலை பார்த்து 3 குழந்தைகள் கதறி அழுத சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

click me!