நாம இருக்கிற கஷ்டத்துக்கு லவ் எல்லாம் தேவையா? கண்டித்த பெற்றோர்! ஸ்டேட்டஸ் வைத்து விட்டு இளைஞர் தற்கொலை..!

By vinoth kumar  |  First Published Sep 22, 2023, 10:49 AM IST

லால்குடி பகுதியில் வேலைக்கு சென்றபோது அந்த பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளது.


திருச்சி அருகே காதலை பெற்றோர் கண்டித்ததால் வாட்ஸ் அப்பில் தூக்கு போட்டு தற்கொலை செய்வதை ஸ்டேட்டஸில் வைத்துவிட்டு இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அடுத்துள்ள தழுதாளப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வடிவேலு. கூலி தொழிலாளி  இவரது மகன் நவீன்குமார் (17).  இவர் முசிறியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் டிப்ளமோ மெக்கானிக்கல் என்ஜினீயரிங்  படித்து வந்தார். குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு நவீன்குமார் விடுமுறை நாட்களில் கூலி வேலைக்கு சென்று வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். 

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க;- அம்மா உணவகத்தில் அதிர்ச்சி! சாம்பார் சாதத்தில் அரணை.. சாப்பிட்டவரின் நிலை என்ன?

லால்குடி பகுதியில் வேலைக்கு சென்றபோது அந்த பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளது. இந்த விவகாரத்தை அறிந்த நவீன்குமாரின் பெற்றோர் முதலில் படிப்பில் கவனம் செலுத்து, பிறகு திருமணம் செய்து கொள்வதை பற்றி பேசிக்கொள்ளலாம் என்று அறிவுரை கூறியதுடன்  கண்டித்ததுள்ளனர்.

தனது குடும்பத்தினர் கண்டித்ததால் நவீன்குமார் அய்யனார் கோவில் அருகே உள்ள ஒரு மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி கயிற்றுடன் மரத்தில் ஏறி மரக்கிளையில் நின்று தற்கொலை செய்யப் போவதை கயிறை மாட்டிக் கொண்டு அதனை தனது செல்போனில் செல்ஃபி எடுத்து வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக வைத்துவிட்டு பின்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதையும் படிங்க;-  ஷாக்கிங் நியூஸ்.. 2 குழந்தைகளுடன் பெண் காவலர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை.. இதுதான் காரணமா?

நவீன்குமாரின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை பார்த்த அவரது நண்பர்கள்  கிராமத்தை சுற்றியுள்ள மரங்களில் தேடி பார்த்துள்ளனர். பின்னர் கோயில் அருகே உள்ள மரத்தில் சடலமாக தொங்கிய நவீன்குமாரை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

click me!