விடாமல் காவு வாங்கும் ஆன்லைன் ரம்மி! பணத்தை இழந்த மருத்துவமனை ஊழியர் தற்கொலை.. நெஞ்சில் அடித்து கதறும் மனைவி.!

By vinoth kumarFirst Published Mar 25, 2023, 2:09 PM IST
Highlights

திருச்சியில் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த மருத்துவமனை ஊழியர் ரவிசங்கர் அதிக தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திருச்சியில் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த மருத்துவமனை ஊழியர் ரவிசங்கர் அதிக தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 2  முறை தமிழக சட்டமன்றத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால், இதை பல மாதங்களாக கிடப்பில் போட்டுவிட்டு ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று கூறி கடந்த 6-ம் தேதி சட்ட மசோதாவை தமிழக அரசுக்கு ஆளுநர் ரவி திருப்பி அனுப்பினார்.

இதனையடுத்து, ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா சட்டபேரவையில்  ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த மருத்துவமனை ஊழியர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அடுத்துள்ள துப்பாக்கி தொழிற்சாலை மருத்துவமனையில் ரவிசங்கர்(42) என்பவர் புரிந்து வந்தார். இவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில், ஆன்லைன் ரம்மிக்கு அடியான ரவிசங்கர் கடன் வாங்கி விளையாடி அதிக அளவு பணத்தை இழந்துள்ளார். இதனால், மனவேதனை அடைந்த ரவிசங்கர் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை கொண்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

click me!