25 ரூபாய்க்கு 1 கிலோ வெங்காயம்..! அடித்துபிடித்து திரளும் பொதுமக்கள்..!

By Manikandan S R SFirst Published Dec 10, 2019, 1:08 PM IST
Highlights

கடலூர் சந்தையில் ஒரு கிலோ வெங்காயம் 25 ரூபாய்க்கு விற்கப்படுவதால் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. 

நாடு முழுவதும் வெங்காய விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இதனால் ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர் என பல்வேறு தரப்பினரும் அதிர்ச்சியில் உள்ளனர். வெங்காய விலை உயர்வால் உணவகங்களில் வெங்காயத்தை உபயோகப்படுத்துவதை உரிமையாளர்கள் தவிர்த்து வருகின்றனர். வெங்காய விலையை கட்டுப்படுத்த அரசு முயற்சி எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

வெங்காய விலை தாறுமாறாக உயர்ந்து வந்த நிலையில் அதைக் கட்டுப்படுத்துவதற்காக எகிப்து நாட்டில் இருந்து 30 டன் பெரிய வெங்காயம் திருச்சி வெங்காய மண்டிக்கு நேற்று வந்தது. எகிப்தில் இருந்து கடல் மூலமாக மும்பை வந்த வெங்காயங்கள், அங்கிருந்து லாரி மூலமாக திருச்சிக்கு கொண்டு வரப்பட்டது. அதன்பிறகு வெங்காய விலை குறைய தொடங்கியது. தற்போது திருச்சியில் கிலோ வெங்காயம் 100 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும் இனி விலை உயர வாய்ப்பில்லை எனவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் கடலூர் சந்தையில் ஒரு கிலோ வெங்காயம் இன்று 25 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கூட்டம் அங்கு அலைமோதுகிறது. விலை குறைவால் கடலூர் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளிலும் இருந்தும் மக்கள் திரண்டு வந்து வெங்காயத்தை வாங்கி செல்கின்றனர். பதுக்கல் தொடர்பான சோதனை மற்றும் பெங்களுருவில் வெங்காய விலை வீழ்ச்சி ஆகியிருப்பதால் கடலூரில் விலை குறைந்திருப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதேபோல திருப்பூரில் ஒரு கிலோ வெங்காயம் 35 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

click me!