முருங்கைக்காய் வரத்து குறைந்து காணப்பட்டதாலும் இன்று முகூர்த்த தினம் என்பதாலும் திருச்சி சந்தையில் ஒரு கிலோ முருங்கை காய் விலை 650 முதல் 800 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
நாடு முழுவதும் வெங்காய விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இதனால் ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர் என பல்வேறு தரப்பினரும் அதிர்ச்சியில் உள்ளனர். வெங்காய விலை உயர்வால் உணவகங்களில் வெங்காயத்தை உபயோகப்படுத்துவதை உரிமையாளர்கள் தவிர்த்து வருகின்றனர். வெங்காய விலையை கட்டுப்படுத்த அரசு முயற்சி எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
undefined
இந்தநிலையில் வெங்காய விலை ஏற்றத்தை தொடர்ந்து தற்போது முருங்கை காய் விலையும் உச்சத்தை அடைந்துள்ளது. முருங்கைக்காய் வரத்து குறைந்து காணப்பட்டதாலும் இன்று முகூர்த்த தினம் என்பதாலும் திருச்சி சந்தையில் ஒரு கிலோ முருங்கை காய் விலை 650 முதல் 800 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதனால் திருச்சி வட்டார மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
இதே போல சென்னை கோயம்பேடு சந்தையில் முருங்கை வரத்து இல்லாததால், ஒரு கிலோ 300 முதல் 350 ரூபாய் வரை விற்கப்பட்டு கொண்டிருக்கிறது. அதே போல மதுரையிலும் ஒரு கிலோ முருங்கைக்காய் 300 முதல் 350 ரூபாய் வரை விற்கப்படுகிறது. வெங்காய விலை ஏற்றத்தால் கலங்கி போயிருக்கும் மக்கள், தற்போது முருங்கை விலை உயர்வால் மேலும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.