திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளை முன்னிட்டு ஒற்றுமைக்காக ஓடவும் என்ற கருத்தை வலியுறுத்தி மத்திய கல்வித்துறை இணைய அமைச்சர் டாக்டர் சுபாஷ் சர்கார் ஒற்றுமை நடைப்பயணத்தை கொடியசைத்து துவக்கி வைத்து ஓடினார்.
மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் டாக்டர் சுபாஷ் சர்க்கார். இவர் திருச்சியில் இரண்டு நாள் நிகழ்ச்சிகளில் பங்கேற்ப்பதாக நேற்று மாலை திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தேவர் ஜெயந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், தேசிய தொழில்நுட்ப கழகத்தில் இரவு தங்கினார்.
இன்று காலை தேசிய தொழில்நுட்ப கழக வளாகத்தில் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளை முன்னிட்டு ஒற்றுமையை வலியுறுத்தி விழிப்புணர்வு நடைப்பயணம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் டாக்டர் சுபாஸ் சர்க்கார் பேசுகையில், ''நாட்டில் 532 மாகாணங்களை ஒருங்கிணைப்பதற்காக சர்தார் வல்லபாய் பட்டேல் பாடுபட்டு இருக்கிறார். மேலும் சர்தார் வல்லபாய் பட்டேலை பெருமைப்படுத்துவதற்காக இந்திய அரசு நாடு முழுவதும் இந்த நாளை வெகு விமர்சியாக கொண்டாடுகிறது'' என்றார்.
undefined
தொடர்ந்து ஒருமைப்பாட்டு உறுதி மொழியை வாசித்தார். மாணவ, மாணவிகள் உறுதி மொழியை ஏற்றனர். இந்நிகழ்ச்சியை அடுத்து சர்தார் வல்லபாய் பட்டேலின் புகைப்பட கண்காட்சியை தொடங்கி வைக்கிறார். இதனைத் தொடர்ந்து மோடி 20 என்ற புத்தகம் குறித்து மாணவர்களிடையே கலந்துரையாடுகிறார். நிகழ்ச்சியில் தேசிய தொழில்நுட்பக் கழக இயக்குனர் அகிலா உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.