மலேசியாவில் இருந்து திருச்சி வந்த ஒருவர் தனது ஆசனவாயில் மறைத்து தங்கத்தை கடத்தி வந்த போது விமான நிலைய சோதனையில் பிடிபட்டார்.
உலகளவில் அனைத்து நாடுகளின் மொத்த வருவாயில், சுங்க வரி முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த 1994க்கு முன், வெளிநாடுகளில் இருந்து தங்கம் கொண்டு வர இந்தியாவில் முற்றிலும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால், நாடு முழுவதும் விமான நிலையங்களில் கடத்தல் தங்கம் அதிகளவில் பறிமுதல் செய்யப்பட்டன.
undefined
இதையடுத்து, 1994 முதல், வெளிநாடுகளில் இருந்து தங்கம் கொண்டு வர அனுமதி வழங்கப்பட்டு சுங்கவரி விதிக்கப்பட்டது. வரி குறைவு என்ற காரணத்தால் மக்கள் மட்டுமின்றி வணிகர்கள் பலர் வெளிநாடுகளிலிருந்து அதிகளவு தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்தனர்.
வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரும் தங்கத்துக்கு விதிக்கப்படும் சுங்கவரி சில ஆண்டுகளுக்கு மீண்டும் உயர்த்தப்பட்டது. இதனால், கடத்தல் அதிகரித்து, நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் தங்கம் அதிகளவு பிடிபடுகிறது. இதன்காரணமாக சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று மலேசியாவில் ஏர் ஏசியா விமானம் ஒன்று திருச்சி வந்தது. அப்போது வழக்கம் போல அதில் வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது பயணி ஒருவர் தனது ஆசனவாயில் மறைத்து தங்கத்தை கடத்தி வந்தது சோதனையில் தெரிந்தது. உடனே அவரை பிடித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
அவர் மயிலாடுதுறையைச் சேர்ந்த முஹம்மது அப்துல் நாசர் என்றும் அவர் தனது ஆசனவாயில் மறைத்து கொண்டு வந்தது 300 கிராம் எடைகொண்ட 3 தங்கக்கட்டிகள். அதன்மதிப்பு சுமார் 11.63 லட்சம் ஆகும். சுங்கத்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.