கடும் இழுபறி..! திமுக,அதிமுக மாறிமாறி முன்னிலை..!

By Manikandan S R S  |  First Published Jan 2, 2020, 10:39 AM IST

தமிழக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.


தமிழகத்தில் ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. வாக்குப்பதிவுக்கு பிறகு வாக்குப்பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பது போடப்பட்டது. தேர்தலில் மக்கள் அளித்த வாக்குகள் இன்று எண்ணப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.

Tap to resize

Latest Videos

தேர்தல் முகவர்கள் முன்னிலையில் காலையில் வாக்கு பெட்டிகளின் சீல் உடைக்கப்பட்டது. அதன்பின் தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகள் வாக்கு எண்ணிக்கையை தொடங்கினர். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. தொடர்ந்து வாக்கு பெட்டியில் இருக்கும் ஓட்டுகள் எண்ணிக்கை தொடங்கி இருக்கிறது. 8 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இறுதி முடிவுகள் வெளிவர நண்பகல் 12 மணிவரை ஆக கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே பிரதான கட்சிகளான திமுகவிற்கும் அதிமுகவிற்கும் இடையே கடும் இழுபறி ஏற்பட்டுள்ளது. மாவட்ட கவுன்சிலருக்கான தேர்தலில் திமுக 7 இடங்களில் முன்னிலை என தகவல் வருகிறது. அதிமுக 2 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. அதேபோல ஒன்றிய கவுன்சிலருக்கான இடங்களில் அதிமுக நான்கிலும் திமுக 15 இடங்களிலும் முன்னிலையில் இருக்கிறது. நாம் தமிழர் கட்சியும் அமமுகவும் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டு இருக்கிறது. கோவை,திருவண்ணாமலை உட்பட சில மாவட்டங்களில் ஓட்டு எண்ணிக்கையில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது.

click me!