சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்தவர் அழகப்பன். கோவில்களில் அலங்கார வேலைகள் செய்துவந்த இவர் சென்னையில் ஒரு வேலையை முடித்துவிட்டு தனது குழுவினருடன் கோவை நோக்கி காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, கார் முசிறி அருகே சென்றிக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக லாரி மீது நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில், கார் அப்பளம் நொறுங்கியது.
திருச்சி அருகே காரும்- லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்தவர் அழகப்பன். கோவில்களில் அலங்கார வேலைகள் செய்துவந்த இவர் சென்னையில் ஒரு வேலையை முடித்துவிட்டு தனது குழுவினருடன் கோவை நோக்கி காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, கார் முசிறி அருகே சென்றிக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக லாரி மீது நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில், கார் அப்பளம் நொறுங்கியது.
இந்த கோர விபத்தில் காரை ஓட்டிய அழகப்பன் உட்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் லாரி ஓட்டுநர் உட்பட 8 பேர் படுகாயமடைந்தனர். விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அழகப்பன் தூக்க கலக்கத்தில் காரை ஓட்டியதே விபத்திற்கு காரணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.